மதுரை
:அடாவடியும், அடிதடியும் இல்லாத வாகன காப்பகத்தை, நம்மால் நினைத்துக் கூட
பார்க்க முடியாது. உள்ளே நுழையும் போதே, கட்டணம் செலுத்த வேண்டும். மூன்று
மணி நேரத்திற்கு பின் வந்தால், மீண்டும் ஒரு கட்டணம் வசூலிப்பர். அதற்கு
ரசீது கிடைக்காது. எதிர்த்து கேள்வி கேட்டால், மரியாதைக் குறைவாக
நடத்துவர். வாகன காப்பகம் என்றாலே, அடியாட்களின் வசூல் காப்பகமாக மாறி
விட்டது. மதுரையில் கூட்டுறவுத் துறை சார்பில், பழங்காநத்தம் வாகன
காப்பகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கம்ப்யூட்டர் "டோக்கன்' மூலம்
சாதித்து வருகின்றனர்.இதற்கென தனி "சாப்ட்வேர்' அமைக்கப்பட்டு,
கம்ப்யூட்டரில் "டோக்கன்' வழங்கப்படுகிறது. வாகனத்தை நிறுத்தியவுடன், வாகன
எண், தேதி, நேரம், ரசீது எண்ணுடன் ரசீது தரப்படும். உடனடியாக பணம் கட்ட
வேண்டியதில்லை. மீண்டும் வாகனத்தை எடுக்க வரும் போது, அந்த ரசீதை கொடுக்க
வேண்டும். அதில் உள்ள வரிசை எண்ணை கம்ப்யூட்டரில் அழுத்தினால், எவ்வளவு மணி
நேரம் வாகனம் நிற்கிறதென கணக்கிட்டு, கட்டணத்தை குறிப்பிட்டு, "அவுட்
பாஸ்' ரசீது
தரப்படும். 12 மணி நேரத்திற்கு மூன்று ரூபாய். அதிலிருந்து
30 நிமிடங்கள் வரை, கருணை நேரமாக கணக்கிடும். 12 மணி நேரம் 31 நிமிடமாகி
விட்டால், ஆறு ரூபாயை கணக்கிடும். இதில் பேரம் பேச நமக்கு வேலையில்லை.
மாநகராட்சி, நகராட்சி, தனியாக வாகன காப்பகத்தில் மூன்று மணி நேரம் கழித்து
வந்தால் கூட, இருமடங்கு கட்டணம் வசூலிப்பர். இதை விட முக்கிய விஷயம்,
திருட்டு வாகனங்கள் இங்கே இருக்கிறதா என, கம்ப்யூட்டர் "லிஸ்ட்டில்' வாகன
எண்களை சரிபார்த்து தெரிந்து கொள்ளலாம். மூன்று மாதங்களுக்கு மேலாக
நிற்கும் வாகனங்களின் எண்களை பட்டியலிட்டு, அருகில் உள்ள போலீஸ்
ஸ்டேஷனுக்கு தகவலாக தந்துவிடுவர். கம்ப்யூட்டர் "சாப்ட்வேரும்' பெரிய
வேலையில்லை. ஒரு கம்ப்யூட்டர் போதும். ஒரே நபர் "டோக்கன்' வாங்கி, ரசீது
தரலாம். மாத கட்டணத்திற்கும் தனியாக டோக்கன் உண்டு. மாநகராட்சி, தனியார்
வாகன காப்பகங்களில் இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தினால், நீண்ட நாட்கள்
நிற்கும் வாகனங்களின் பட்டியலைத் தெரிந்து கொள்ள முடியும். திருட்டுப் போன
வாகனங்களை, போலீசார் கண்டறிவதற்கு உதவியாக இருக்கும். காப்பகங்களின் அடாவடி
வசூலும் குறைந்து விடும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.