Advertisement
தேனியில் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் இறந்து கிடந்தவர்களில் 10பேர் கொலை : போலீஸ் விசாரணையில் "திடுக்' தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012,00:15 IST

தேனி: தேனி மாவட்டத்தில், அடையாளம் தெரியாமல், இறந்து கிடந்தவர்களில், 10 பேர் கொலையானவர்கள் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனி மாவட்டம் முழுவதும், 2012 ஜன., முதல், டிச., 26 வரை, 30 அடையாளம் தெரியாத, இறந்த உடல்கள் கைப்பற்றபட்டன.இதில், 25 பேர் ஆண்கள். 5 பேர் பெண்கள்.இவற்றில்,13 பேர் யார் என, தெரியவந்தது. மற்ற, 17 பேர் பற்றிய,எந்த விபரமும் தெரியவில்லை. இவர்களில்,சிலரது உடல், பஸ் ஸ்டாண்ட், ஆறு, சாலையோரம், அனாதையாக,கிடந்தது. இந்த,17 பேரில், ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இரண்டு பேர், கொலை செய்யப்பட்டிருக்கலாம், என, சந்தேகம் நிலவுகிறது. ஜன., 2011 ல், கண்டறியப்பட்ட, அடையாளம் தெரியாத உடல்களில், 8 பேர் மர்மமான முறையில், கொலை செய்யப்பட்டவர்கள் என, மருத்துவ பரிசோதனை அறிக்கையிலும்,போலீஸ் விசாரணையிலும் தெரியவந்துள்ளது. கடந்த, 2 ஆண்டுகளில்,கொலை செய்யப்பட்ட 10 பேர் உட்பட, அடையாளம் தெரியாத, 25 உடல்கள் யாருடையது, என்பதை கண்டறியும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, எஸ்.பி., பிரவீன் குமார் அபினபு கூறியதாவது: மலைப் பகுதியிலும், ஆற்றிலும், கிணற்றிலும், இறந்து சில நாட்களுக்கு பின், மீட்கப்பட்ட உடல்கள், முற்றிலும் அழுகிய நிலையில் கண்டறியப்பட்டதால், அவர்கள் யார் என, தெரியவில்லை. அவர்களின், உடலில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மூலம், "சூப்பர் இன்போசிஸ்' முறையில் முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களது, உடைகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இறந்தது யார் என, தெரியாததால், அவர்களை பற்றிய விசாரணையில், எந்த முன்னேற்றமும் இல்லை. இருப்பினும், கொல்லப்பட்டதாக, சந்தேகப்படும் உடல்கள் குறித்து, தனி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, விசாரணை நடத்த, போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.