Advertisement
துணை முதல்வர் வீட்டில் பணம் எண்ணும் இயந்திரம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012,00:15 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 28,2012,06:13 IST

பெங்களூரு:கர்நாடக மாநில துணை முதல்வர், ஈஸ்வரப்பா வீட்டில், பணம் எண்ணும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பரபரப்பை மேலும் அதிகரித்து உள்ளது.அண்டை மாநிலமான கர்நாடகாவில், பா.ஜ., கட்சியை சேர்ந்த, ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராகவும், துணை முதல்வராக, கே.எஸ்.ஈஸ்வரப்பாவும் உள்ளனர்.

"லோக் ஆயுக்தா' எனப்படும், மக்கள் நீதிமன்றத்திற்கு வந்த புகார்களை அடுத்து, கடந்த திங்கள் கிழமை, ஈஸ்வரப்பா வீட்டில், "லோக் ஆயுக்தா' போலீசார் சோதனை நடத்தி, ஏராளமான பணம், நகைகள், பத்திரங்களை கைப்பற்றினர்.சோதனையின் போது, 2 கிலோ தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருட்கள், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.



இந்நிலையில், அவர் வீட்டில், ரூபாய் நோட்டு எண்ணும் எலக்ட்ரானிக் இயந்திரமும் கைப்பற்றப்பட்ட தகவல் நேற்று வெளியாகியது.வங்கிகளிலும், ஏராளமான பணப்புழக்கம் உள்ள இடங்களிலும், பயன்படுத்தப்படும் இந்த இயந்திரம், துணை முதல்வர் வீட்டில் கைப்பற்றப்பட்டதால், பரபரப்பு அதிகரித்து உள்ளது.மேலும், 12 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, 55 லட்சம் ரூபாய்க்கு, பத்திர பதிவு செய்துள்ளதாகவும், ஈஸ்வரப்பா மீது புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
Pugal - Kovai ,இந்தியா
28-டிச-201211:39:16 IST Report Abuse
Pugal இத்தாலி, மஞ்ச துண்டு என்று மட்டுமே பேசிவரும் நண்பர்களுக்கும், பா ஜ க விற்கு ஆதரவளிக்கும் அன்பர்களுக்கும் இந்த செய்தி ஒரு காணிக்கை. இருந்தும், பா ஜ க வர வேண்டும் என்று தான் பேசுவார்கள். பரவாயில்லை. சொல்ல நினைத்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Krishnamoorthy Srinivasa Rao - delhi,இந்தியா
28-டிச-201208:11:46 IST Report Abuse
Krishnamoorthy Srinivasa Rao எடியூரப்பாவுக்கு சளைத்தவரில்லை இந்த ஈஸ்வரப்பா.... யப்பா......
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
vaaimai - Appleton, WI ,யூ.எஸ்.ஏ
28-டிச-201205:54:15 IST Report Abuse
vaaimai உலகம் கண்டறியாத பொறுக்கித்தனம் உள்ளவர்கள் தான் அரசியலுக்கு வருகிறார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.