புதுடில்லி:""ஜம்மு - காஷ்மீரில், ராணுவத்தினருக்கு எதிராக, கற்பழிப்பு புகார்கள் எழுந்தபோது, அது குறித்து விசாரணை நடத்தியது உண்டா?'' என, முன்னாள் ராணுவ தளபதி, வி.கே.சிங்கிற்கு, தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர், வஜாஹத் அபிபுல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.டில்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது; இதை, கண்டிக்காதவர்களே இல்லை.
இந்த படுபாதக செயலுக்கு, காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, டில்லியில் மாணவ, மாணவியர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இந்த போõராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அரசுக்கு எதிராகவும், முன்னாள் ராணுவ தளபதி, வி.கே.சிங் கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர், வஜாஹத் அபிபுல்லா, வி.கே.சிங்கிற்கு எதிராக கூறியிருப்பதாவது:கற்பழிப்பு சம்பவம் மற்றும் அதை தொடர்ந்து நடைபெறும் போராட்டம் குறித்து சிங் விமர்சித்துள்ளார்.
ஒரு முன்னாள் ராணுவ தளபதி என்ற முறையில், இதை எப்படி சமாளிக்கலாம் என, அரசுக்கு ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும். ராணுவ தளபதியாக சிங் பணியாற்றிய போது, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ராணுவத்திற்கு எதிராக கற்பழிப்பு புகார்கள் பெருமளவில் எழுந்தன. அப்போது ஏன் விசாரணை நடத்தப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. ராணுவத்திற்கு எதிராக எழுந்த புகார்களை விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு, தீர்வு கிடைக்க வாய்ப்பு இருந்தும் செய்யவில்லை.
இவர் பதவி காலத்தில், எத்தனையோ முறை பிரதமரை, உள்துறை அமைச்சரை சந்தித்து இருப்பார். அப்போது, ராணுவத்திற்கு எதிரான புகார்களை எப்படி சமாளிப்பது என்று கேட்டு இருக்கலாம்.தற்போது, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், கடந்த சில ஆண்டுகளாக, நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. ராணுவத்தினர் மக்களிடம நெருங்க முயற்சிக்கின்றனர். இருப்பினும், ராணுவத்தின் மீது ஏற்பட்ட அவநம்பிக்கை முற்றிலும் நீங்கிவிடவில்லை. சிலர் செய்யும் தவறுக்காக, ஒட்டு மொத்த ராணுவத்திற்கே இழுக்கு ஏற்படுகிறது.
குற்றத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். புகார் தவறு என்றால், உண்மையை மக்கள் அறியும்படி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.தேசிய சிறுபான்மை கமிஷனராக உள்ள வஜாஹத் அபிபுல்லா, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இந்தியாவின், முதல் தலைமை தகவல் அதிகாரியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.