தின்சுகியா:அசாமில், தேயிலை தோட்ட உரிமையாளரும், அவரது மனைவியும், தொழிலாளர்களால், உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
தின்சுகியா பகுதியில், எம்.கே.பி., தேயிலை தொழிற்சாலை என்ற, தனியார் நிறுவனம் உள்ளது. இந்த பகுதியில் சில காலமாகவே, நக்சல் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
நிர்வாகத்தின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்காத, இரண்டு தொழிலாளர்களை, தேயிலை தொழிற்சாலை உரிமையாளர், டி.கே.பட்டாச்சார்யா, வெளியேற்றியுள்ளார்.நிர்வாகம் வழங்கியிருந்த குடியிருப்பில், பதவி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள், தங்கியிருந்த குடியிருப்பை விட்டு வெளியேறாமல், முரண்டு பிடித்தனர். இதனால், உரிமையாளர் பட்டாச்சார்யா, போலீசில் புகார் செய்தார்.
இரு தொழிலாளர்களையும், குடியிருப்பில் இருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால், கோபம் கொண்ட பிற தொழிலாளர்களும், அவர்களுடன் ஊடுருவிய மாவோயிஸ்ட் தீவிரவாதிகளும், நேற்று முன்தினம் இரவில், உரிமையாளர் பங்களாவை, வெளிப்புறமாக பூட்டி தீ வைத்தனர்.இதில், பட்டாச்சார்யாவும், அவர் மனைவியும், அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல் சிதைந்து இறந்தனர்.
பங்களா வெளியே நிறுத்தியிருந்த கார்களையும், வன்முறை கும்பல் தீ வைத்து எரித்தது.இந்த கொடூர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள, காங்கிரசின் மாநில முதல்வர், தருண் கோகாய், "மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என, சந்தேகிக்கிறோம்; அவர்களின் வன்முறை செயல்கள் ஒடுக்கப்படும்' என, வழக்கம் போல, "லாவாணி' பாடினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.