Advertisement
"அம்போ'வென நிற்கிறது ரூ.1 கோடி ஆடம்பர கார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012,00:18 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 28,2012,06:15 IST

பெங்களூரு:ஒரு கோடி ரூபாய் விலை மதிப்புள்ள, ஆடம்பர, "லெக்சஸ்' காரை, பெங்களூரு சாலை ஒன்றில், 18 மாதங்களாக கண்டுகொள்ளாமல், யாரோ விட்டு வைத்துள்ளனர். அந்த கார் யாருடையது, ஏன் கவனிக்கப்படாமல் நிற்கிறது என்பது அந்த பகுதி மக்களுக்கு இன்னும் தெரியவில்லை.பெங்களூரு, ஜெயா நகர் பகுதியில் உள்ள ஜே.பி., நகரில், அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும், உயர் அதிகாரிகளும் வசிக்கின்றனர். இங்குள்ள, டாலர்ஸ் காலனி என்ற இடத்தில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, குறைந்தபட்சம், ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட, புதிய மாடல், "லெக்சஸ்' கார், குப்பை, கூளங்களுக்கு நடுவே நிற்கிறது.

நீண்ட காலமாக அந்த கார் அங்கேயே நிற்பதால், குப்பை கொட்டும் இடமாக மாறி, ஆடம்பர கார், சோபை இழந்து, சோகமாக இருக்கிறது. அதன் டயர்களில் காற்று இறங்கி, கண்ணாடிகள் அழுக்கடைந்து பரிதாபமாக காட்சியளிக்கிறது.கேரள மாநில பதிவெண் கொண்ட அந்த கார், 18 மாதங்களாக கண்டுகொள்ளப்படாமல் அப்படியே நிற்கிறது. அதை அகற்றவோ, உரிமையாளரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கவோ, பெங்களூரு போலீசாருக்கு நேரமில்லை.



இது பற்றி, ஜே.பி., நகர்வாசி ஒருவர் கூறியதாவது"2011, பிப்ரவரியில் இருந்து, இந்த கார் இங்கு நிற்கிறது. அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களின் காராக இருக்கலாம் என நினைத்தோம்; ஆனால், அந்த பகுதியில் வசிக்கும் யாருக்கும் அந்த கார் சொந்தமில்லை என தெரிவிக்கின்றனர். இவ்வளவு விலை உயர்ந்த காரை, கண்டுகொள்ளாமல் விட்டிருப்பவர் யார் என்ற, மர்மம் எப்போது விலகுமோ தெரியவில்லை' இவ்வாறு அவர் கூறினார்.






வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Sriram - Chennai,இந்தியா
28-டிச-201214:46:37 IST Report Abuse
Sriram ரொம்ப சுலபம்... கருப்பு பணம் வைத்து வாங்கப்பட்ட கார் தான் இது... அதனால்தான் போலீசும் கண்டுகொள்ளவில்லை...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
28-டிச-201211:14:40 IST Report Abuse
LAX ஏதாவது லஞ்ச ஊழலில் மாட்டியவர்லளின் காராக இருக்கலாம். அல்லது தேடப்படும் குற்றவாளிகளின் காராகவும் இருக்கலாம். பதிவு எண்ணைக்கொண்டு ஆர்டிஓ அலுவலகத்தில் விசாரித்திருக்கலாமே....?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.