Advertisement
மன்னார் வளைகுடாவில் தேங்கிய கழிவுகளால் அழிந்து வரும் அரியவகை உயிரினங்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளிநாட்டிலிருந்து வரும் கழிவுகளால் அரியவகை உயிரினங்கள் அழிந்து வருவதுடன், பாலிதீன் மூலம் அழிவை ஏற்படுத்தும் சிற்றினங்கள், இடம்பெயர்ந்து வந்து நோய்களை பரப்பும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில், தோராயமாக 3 ஆயிரத்து 600 கடல் வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. இதில் 117 வகையான பவள உயிரிகள், 12 வகை கடற்புற்கள், 10 வகை சதுப்பு நிலத்தாவரங்கள், 100 வகை முட்தோலிகள், 147 வகை கடல்பாசிகள், 450 வகை மீனினங்கள், 150 வகை வண்ண மீன்கள், 5 வகை கடல் ஆமைகள், 6 வகை திமிங்கலங்கள், ஒரு வகை கடல்பசு, 70 வகை கணுக்காலிகள், 260 வகை சங்கு சிப்பிகள் உள்ளன. அரியவகை உயிரினங்கள் ஏராளமாக உள்ளதால், இவற்றை பாதுகாக்க மன்னார் வளைகுடா அறக்கட்டளை, பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. ஆனால், தற்போது கடலோர பகுதிகளிலிருந்து கழிவுகளை கடலில் போடுவதால், பல்வேறு உயிரினங்கள் அழிவதுடன் பவளப்பாறைகள் உயிரிழக்கின்றன. இதனால், இயற்கை பாதுகாப்பு கேள்விகுறியாவதுடன், மீன் இனப்பெருக்கமும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மன்னார் வளைகுடா ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதாவது: மன்னார் வளைகுடாவில் பழைய துணி, கண்ணாடி பாட்டில், பீங்கான், தோல், பிளாஸ்டிக் பாலிதீன் போன்ற பலவிதமான கழிவுகள் கடலுக்கு அடியில் காணப்படுகிறது.
குறிப்பாக மீனவர்கள் அறுந்த வலைகளை கடலுக்குள் வீசுவதால், அந்த வலை அடியில் செல்லும் போது அதில், பாலூட்டி உயிரினமான கடல்பசு சிக்கி, பலியாகிறது. பிளாஸ்டிக், பிளக்ஸ் மற்றும் சிமென்ட் சாக்குகள், பவளப்பாறை மற்றும் கடல்புற்கள் மீது படிந்து அழித்துவிடுகிறது. பிளாஸ்டிக் பாட்டீல்களில் ஒருவகை உயிரினம் ஒட்டி கொள்ளும். பாட்டில் காற்றின் வேகத்திற்கு தகுந்தாற்போல் இடம்பெயரும்போது, இவ்வகை உயிரினங்களும் இடம்பெயர்ந்து வந்து இனப்பெருக்கம் செய்யும். இதுபோன்று வரும் உயிரினங்கள் சில விஷத்தன்மை கொண்டதாக இருப்பின், சுற்றுச்சூழலை பாதித்து அபாயத்தை ஏற்படுத்திவிடும். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை, ஆமைகள், ஜெல்லி மீன் என கருதி உண்பதால், இறந்துவிடுகின்றன.
கழிவுகள் தமிழக கடலோரபகுதிகளிலிருந்து மட்டுமின்றி, தென்மேற்கு பருவ காற்று வீசும் நேரங்களில் மலேசியா, சிங்கப்பூர், சீனா, இலங்கை பகுதிகளிலிருந்தும் அதிகமாக வருவது கண்டறியப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் குப்பை தொட்டி அமைப்பது, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாதத்திற்கு மூன்று முறையாவது கடற்கரையை சுத்தம் செய்யும் முகாம் நடத்துவது, போன்றவைகளால் கடல் மாசுப்படுவதை ஒரளவு கட்டுப்படுத்தலாம், என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.