பாலக்காடு:ஓடும் ரயிலில், அவசர ஜன்னல் வழியே, தவறி விழுந்த, 7 வயது சிறுமி, பலத்த காயமடைந்து இறந்தாள்.கேரளா, கோட்டயம் மாவட்டம், குருவிலாங் காட்டை சேர்ந்தவர் ஜோசப் ஜார்ஜ். டில்லியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்; இவரது மனைவி ஷைனி. கடந்த நான்கு மாதங்களாக, கேரளாவில், எம்.எஸ்சி., நர்சிங் பயின்று வருகிறார்.
இந்த தம்பதியின் மகன், ஜீஸ் மாத்யூ, 10, மகள் ஜியா அன்னா, 7. நர்சிங் கல்வி பயின்று வருவதால், கேரளாவில் தங்கியுள்ளார் ஷைனி. குழந்தைகள் இருவரும், டில்லியில், தந்தையுடன் இருந்தனர்.இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டா டவும், தாயை பார்க்கவும், கேரளா செல்ல விரும்பின குழந்தைகள்.
இதையடுத்து, குழந்தைகளுடன், டில்லி - திருவனந்தபுரம், கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில், சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார் ஜோசப் ஜார்ஜ். நேற்று முன்தினம் காலை, பாலக்காடு அருகே ரயில் வந்த போது, ரயிலில் சகோதரனுடன், ஜியா விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, பெட்டியில் இருந்த, அவசர ஜன்னல் வழியே, வெளியே எட்டி பார்த்தபோது, திடீரென ரயிலில் இருந்து கீழே விழுந்தாள்.
இதனால், அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், உடனே அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில் நின்றதும், ஜோசப் ஓடிச் சென்று, ரயில் பாதை அருகே பலத்த காயங்களுடன் கிடந்த, ஜியாவை தூக்கி, பாலாக்காடு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தார். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.