மதுரை: தமிழகத்தில், 16 ஆயிரம் கி.மீ., சாலைகள் பராமரிப்பு இன்றி, மோசமாக உள்ளன. 2012-13 ஆண்டுக்கு 70 கோடி ரூபாய் ஒதுக்கியும் பணிகள் நடக்கவில்லை. பழுதான பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்கள், பழைய சாலைகளை புதுப்பித்தல், சாலைகளை மேம்படுத்துதல், விரிவாக்கச் சாலைகள் குறித்து, ஆண்டு தோறும் ஏப்ரலில், மாநில நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மேற்கொள்ளும். மேம்பாட்டு பணிக்கான திட்ட மதிப்பீடு குறித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். பின், டெண்டர் விடப்பட்டு, மார்ச்சில் பணிகள் துவங்கும். தமிழகத்தில், 2012-13 க்கான ஆய்வுகள், ஏப்ரலில் முடிக்கப்பட்டன. இதன்படி, பழுதான 16 ஆயிரம் கி.மீ., சாலைகளை பராமரித்தல், பழுதான பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்கள் கட்டுதல் உட்பட நெடுஞ்சாலையின் மேம்பாட்டுப்பணிகளுக்காக, 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மாவட்டம் தோறும் உட்கோட்ட அளவில் ஒப்பந்ததாரர் ஒருவரிடம், பணிகளை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
உதாரணமாக, மதுரையில் வடக்கு, தெற்கு, மேலூர், திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டி என ஆறு உட்கோட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு உட்கோட்டத்திலும், ஒரு கோடி ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், சாலை மேம்பாட்டுப்பணிகள் நடக்கும். உட்கோட்ட அளவில் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் பணிகள் ஒதுக்குவதால், சிறிய ஒப்பந்ததாரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஒப்பந்தம் எடுத்தவர் மனது வைத்தால் மட்டுமே, அவர்களிடம் சிறிய ஒப்பந்ததாரர்கள், "சப்-கான்ட்ராக்ட்' ஆக வேலை பார்க்க இயலும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறிய ஒப்பந்ததாரர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், 2011-13 ல், 16 ஆயிரம் கி.மீ., சாலைகள் உட்பட மேம்பாட்டு பணிகள் நடக்கவில்லை. தற்போது, 2013-14 க்கான சாலை மேம்பாட்டு பணி ஆய்வுகள் நடக்கின்றன. எனவே, புதிய பாலங்கள், பல கி.மீ., தொலைவுள்ள சாலைகளை அமைக்கும் பணிகளை பெரிய ஒப்பந்ததாரர்களிடமும்; பழுதான பாலங்களை புதுப்பித்தல், சாலை பராமரிப்பு போன்ற பணிகளை சிறிய ஒப்பந்ததாரர்களுக்கும் ஒதுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.