மதுரை: வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பொதுமக்களின் "டெபாசிட்'களுக்கு, 12.5 சதவீதத்திற்கு மேல் வட்டி தந்தால், "டெபாசிட்' பணத்தை இழக்க நேரிடும் அபாயம் உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன், நாடு முழுவதும் நிதி நிறுவனங்கள் மழைக் காளான்கள் போல முளைத்திருந்தன. பொதுமக்களிடம் "டெபாசிட்' பெறுவது, அதற்கு பரிசு வழங்குவது, கூடுதல் வட்டி தருவதென, சத்தமின்றி பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்தன. நிதி நிறுவனங்கள், மூட ஆரம்பித்த பின்தான், பொதுமக்கள் சுதாரித்தனர். நிதி நிறுவனங்களை நோக்கி, படையெடுக்க ஆரம்பித்தாலும், "டெபாசிட்' செய்த அனைவருக்குமே, இதுவரை பணம் கிடைக்கவில்லை. போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
மதுரை எஸ்.பி., பாலகிருஷ்ணன் கூறியதாவது: ரிசர்வ் வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ரிசர்வ் வங்கி நிறைய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அனைத்து வங்கி சாரா நிதி நிறுவனங்களும், ரிசர்வ் வங்கியின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு பெற்ற நிறுவனங்களின் பெயர், முகவரி, போன் எண், ரிசர்வ் வங்கி இணையதளத்தில்(ணூஞடி.ணிணூஞ்.டிண) இடம்பெற்றிருக்கும். அனைத்து நிறுவனங்களுமே பொதுமக்களிடம் "டெபாசிட்' வசூலிக்க முடியாது. நிறுவனங்களின் நிதி நிலைமை, கையிருப்பைப் பொறுத்தே, "டெபாசிட்' பெறும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கும். பொதுமக்களிடம் வாங்கும் "டெபாசிட்'களுக்கு, ஆண்டுக்கு 12.5 சதவீத வட்டிக்கு மேல்
வழங்கக்கூடாது. அதற்கு மேல் வட்டி கிடைக்கிறது என்றால், உங்கள் பணத்தை இழக்க நேரிடலாம். ஐந்தாண்டுகளுக்கு மேல் பணத்தை "டெபாசிட்' செய்யமுடியாது. பரிசுத்தொகை கொடுப்பதும் தவறு. ரசீது உடனடியாக பெறவேண்டும்.
பரிசு சீட்டு மற்றும் பணசுழற்சி திட்டம் தடைச்சட்டம் 1978ன் கீழ், பணச்சுழற்சி தடைசெய்யப்பட்டுள்ளது. கிராம, நகர்ப்புறங்களில் சீட்டுப் பிடித்தல், பணத்திற்கு பதிலாக பொருட்கள் தருதல் உட்பட பல்வேறு வகைகளில், பொதுமக்களிடம் இருந்து "டெபாசிட்' பெறப்படுகின்றன. இவற்றில் பணத்தை இழக்கக்கூடாது. அப்படி யாராவது ஏமாற்றியிருந்தால், உடனடியாக ஸ்டேஷனில் புகார் செய்யலாம், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.