வாஷிங்டன்:""என்னுடைய மகளின் மொபைல் போனிலும், அவளுடைய ஆண் நண்பர்களின் அழைப்பு வருகிறது,''என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமா, தன் குடும்பத்துடன், ஹவாய் தீவில், கிறிஸ்துமஸ் விடுமுறையை கழித்தார். அப்போது, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:என், 20 ஆண்டு மண வாழ்க்கையில், மற்றவர்களை போல ஏற்ற தாழ்வுகள் இருந்தன. இக்கட்டான சமயங்களில், நாம் காட்டும் அன்பும், மரியாதையும், கணவன் மனைவிக்குள் இருக்கும் உறவை மேம்பட வைக்கிறது.
என் மூத்த பெண், பெரியவளான பிறகு, அவளுக்கும் மொபைல் போன் கிடைத்து விட்டது. தற்போது, இந்த மொபைல் போனில் அவளுக்கு ஆண் நண்பர்களின் அழைப்பு வருகிறது. இருப்பினும் என் மகள்களுக்கு பெரிய அளவில் பொய் சொல்ல தெரியாது.இவ்வாறு ஒபாமா கூறினார்.ஒபாமாவின் மனைவி மிச்சேல் குறிப்பிடுகையில், "எனக்கு அரசியலில் ஆர்வம் கிடையாது. என் கணவரின் நடவடிக்கைகள் மூலம் அரசியலை தெரிந்து கொள்கிறேன்' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.