தேனி: மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த போலீஸ்காரர் மணிவண்ணனை தேனி மகளிர் போலீசார் கைது செய்தனர்.
தேனி பாரஸ்ட்ரோட்டை சேர்ந்தவர் திவ்யபாரதி, 19. இவருக்கும் கூடலூரை சேர்ந்த மணிவண்ணன்,28 என்பவருக்கும் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மணிவண்ணன் காஷ்மீரில் பி.எஸ்.எப்., போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
திருமணத்தின் போது திவ்யபாரதி வீட்டினர் 22 பவுன் நகை, சீர்வரிசை கொடுத்துள்ளனர். திருமணம் ஆன 15 நாட்களுக்குள் மணிவண்ணன், இதில் 12 பவுன் நகையினை வாங்கி அடகு வைத்து செலவு செய்து விட்டார். கணவன், மனைவி உறவை செல்போனில் படம் பிடிக்க முயற்சி செய்து""செக்ஸ் டார்ச்சர்'' கொடுத்துள்ளார். பயந்துபோன திவ்யபாரதி கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பெரியவர்கள் சமரசம் பேசி, இருவரையும் சேர்த்து வைக்க முயற்சித்தும் பலனில்லை.
இந்நிலையில் பணிக்கு சென்ற மணிவண்ணன், டிச., 21ம் தேதி மறுபடியும் விடுமுறையில் வந்தார். அப்போது, தாய் வீட்டில் இருந்த திவ்யபாரதியிடம், கூடுதல் வரதட்ணை கேட்டு தகராறு செய்துள்ளார். கணவரிடம் வாழ மறுத்த, திவ்யபாரதி தேனி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மணிவண்ணனை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதில் எவ்ளோ உண்மை எவ்ளோ பொய் என்று தெரியாது... ஆனால் கணவனுடன் வாழபிடிக்கவில்லை என்றால், மனைவி தரும் முதல் அறிக்கை இதுதான் வரதட்ச்சனை கேட்கிறார் அல்லது பாலியல் தொந்தரவு... காவல்துறையும் சிக்கினான் அடிமையென்று கணவனை பிடித்து சிறையில் அடைகிறார்கள்... உண்மையில் சிலர் சட்டத்தை தவறாகவும் பயன் படுத்துகிறார்கள்..... கணவர்கள் பாவம் ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.