லாஸ் ஏஞ்சல்ஸ்:அமெரிக்காவின், பிரபல பாப் இசை பாடகி, பிரிட்னி ஸ்பியர்சின், மூத்த குழந்தை, தனக்கு பிறந்தது, என மாஜி கணவரின் சகோதரர் உரிமை கோரியுள்ளார்.அமெரிக்க பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், டிவி நிகழ்ச்சிகளிலும், விளம்பர படங்களிலும் நடிக்கிறார். இவரது மாஜி கணவர் கெவின் பெடர்லின். பிரிட்னிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இதற்கிடையே, மாஜி கணவர் கெவினின் சகோதரர், கிறிஸ்டோபர், கோர்ட்டில் ஒரு மனு செய்துள்ளார்.
கிறிஸ்டோபர் மனுவில் கூறியுள்ளதாவது:என் சகோதரர் கெவின் வீட்டுக்கு, கடந்த வாரம், பிரிட்னி வந்தார். அங்கிருந்த இரண்டு குழந்தைகளையும், தன்னுடன் அழைத்து சென்றார். அப்போது, அங்கிருந்த மேசையிலிருந்து, கெவினின் கிரெடிட் கார்டை திருடி கொண்டார். இது குறித்து போலீசில் தெரிவித்தால், "என்னுடைய கார்டை திருடி விட்டதாக உன் மீது புகார் கொடுப்பேன்' என மிரட்டினார். பிரிட்னி வாழ்க்கையை கெவின் சீரழித்து விட்டதாக குற்றம் சாட்டினார்.பிரிட்னியின் மூத்த மகன் சீன் பிரெஸ்டோன், 7, எனக்கு பிறந்தவன். பிரிட்னி என்னுடன் பலமுறை படுக்கையை பகிர்ந்துள்ளார்.இவ்வாறு கிறிஸ்டோர் கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.