திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, மரத்தில் ஜீப் மோதியதில், மூன்று பேர் பலியாயினர். கர்நாடக மாநிலம், ஷிமோகாவை சேர்ந்த ஏகாம்பரம், 55. இவரது மனைவி கலாவதி, 50, உறவினர் சுப்பிரமணி, 53, இவரது மனைவி ஆண்டாள், 42, பேரன் கிஷோர், 6, ஆகியோர், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக, நேற்று முன்தினம், மகேந்திரா ஜீப்பில் சென்றனர். மாலை, 6:00 மணி அளவில், திருவண்ணாமலை - மணலூர் பேட்டை சாலையில் சென்ற போது, கன்னமடை காட்டு பகுதியில், ரோட்டோரமுள்ள புளிய மரத்தின் மீது ஜீப் மோதியது.
இதில், ஏகாம்பரம் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த டிரைவர் ராஜேந்திரன் உள்பட, ஐந்து பேரை, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். கலாவதி, வழியிலேயே இறந்தார். மேல் சிகிச்சைக்காக, மற்ற நால்வரும், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை, சிகிச்சை பலனின்றி கிஷோர் இறந்தார். தச்சம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.