சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள, உறுப்பு மாற்று சிகிச்சை மருத்துவமனையில், டில்லி மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.டில்லியில், கடந்த வாரம், ஓடும் பஸ்சில், கற்பழிக்கப்ட்ட, மருத்துவக் கல்லூரி மாணவி, கடுமையாக தாக்கப்பட்டார். இதனால், படுகாயமடைந்த அந்த பெண், டில்லி, சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்தார். மூன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதையடுத்து, நேற்றுமுன்தினம், விமான ஆம்புலன்ஸ் மூலம், சிங்கப்பூருக்கு, அழைத்து செல்லப்பட்டார்.இதற்கான, எல்லா ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்தது. மாணவியுடன், இரண்டு டாக்டர்களும், அவரது பெற்றோரும் சென்றுள்ளனர்.சிங்கப்பூரில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும், பிரபல, மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில், இந்த மாணவி நேற்று காலை சேர்க்கப்பட்டார்.
மாணவிக்கு வேண்டிய மற்ற உதவிகளை, சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் செய்து வருகிறது. "மாணவி குடும்பத்தின் தனிதன்மையை பாதுகாக்க வேண்டியிருப்பதால், அவரது உடல் நிலை குறித்த கருத்தை தெரிவிக்க முடியாது' என, தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.சிங்கப்பூரில் தற்போது மாணவி சேர்க்கப்பட்ட மருத்துவமனையில் தான், நடிகர் ரஜினிகாந்த், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொது செயலரும், ராஷ்டிரிய லோக் மஞ்ச் கட்சியின் தலைவருமான, அமர்சிங் உள்ளிட்டோர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.