மதுரை: தூத்துக்குடியில் தி.மு.க., ஊழியர் கூட்டத்தை, வேறு இடத்தில் நடத்துவது பற்றி, சம்பந்தப்பட்ட அதிகாரி மனுவை பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க.,செயலாளர் பெரியசாமி தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் உள்ளது. பார்லி., தேர்தல் தொடர்பாக, தி.மு.க., ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம், அங்கு இன்று ( டிச.,28) நடத்த, மாநகராட்சி கமிஷனரிடம் டிச.,11 ல் மனு அளித்தோம். அனுமதி வழங்கப்பட்டது. வாடகை 5000 ரூபாய் செலுத்தினோம். தடையில்லா சான்று மற்றும் போர்டுகள் வைக்க, போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
கூட்டம் நடைபெற உள்ள இடம் அருகே, வர்த்தக கண்காட்சி நடக்கிறது. இதனால் நெரிசல் ஏற்படும்; அனுமதி மறுக்கப்படுகிறது என, டிச.,24 ல் கமிஷனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் நடத்த அனுமதியளிக்க, கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் மனு விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், மனுதாரர் வக்கீல் வீரகதிரவன் ஆஜராகினர். வீரகதிரவன்: இக்கூட்டத்திற்கு தி.மு.க., நிர்வாகிகள் மட்டுமே வருவர். பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. செல்லப்பாண்டியன்: அனுமதியின்றி, சம்பந்தப்பட்ட இடத்தில் கூட்டம் நடத்த ஏற்பாடு நடக்கிறது. போலீசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. நீதிபதி: மனுதாரர் வேறு ஒரு நாளில் கூட்டம் நடத்த, மாநகராட்சி கமிஷனரிடம் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அதை, கமிஷனர் ஒருவாரத்தில் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கூட்ட ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, தற்போதைய நிலையே தொடர வேண்டும்.
வீரகதிரவன்: நாளை (இன்று) வேறு இடத்தில் கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதியளிக்க, உத்தரவிட வேண்டும்.
நீதிபதி: மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், விண்ணப்பிக்க வேண்டும். அதை சட்டத்திற்குட்பட்டு, பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.