தேனி: ரயிலில் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஏலக்காய் மூடைகளை, இடையில் இறக்கி 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மோசடிசெய்த,இருவர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், தேவாரம் ரெங்கா ஸ்பைசஸ் நிறுவனம் வட மாநிலங்களுக்கு ஏலக்காய் மூடைகளை அனுப்பி வர்த்தகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஏலக்காய்களை 25 சாக்குகளில் கட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள குப்தா டிரேடர்ஸ்க்கு அனுப்பி வைத்தது. தேவாரத்தில் இருந்து சென்னை வரை கூரியரில் சென்ற ஏலக்காய் மூடைகள், சென்னையில் இருந்து ஜெய்ப்பூருக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த மூடைகளை இறக்க வேண்டிய நபருக்கு, ரகசிய குறியீட்டு எண்கள் வழங்கப்பட்டன. இந்த எண்களை ரயில்வே ஸ்டேஷனில் பதிவு செய்து, சரக்குகளை இறக்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஜெய்ப்பூர் சென்று சேர்வதற்கு சற்று முன்னரே, மர்ம நபர்கள் ரகசிய குறியீட்டு எண்களை கூறி, ரயிலில் இருந்து ஏலக்காய் மூடைகளை எடுத்துச் சென்று விட்டனர். ஜெய்ப்பூருக்கு சேர வேண்டிய இடத்திற்கு ஏலக்காய் மூடைகள் சென்று சேரவில்லை. இது பற்றி தெரியவந்ததும் ஸ்பைசஸ் நிறுவன மேலாளர் பாலசரவணன், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் குறியீட்டு எண்ணை மர்ம நபர்களுக்கு தெரிவித்தாக, ஏலக்காய் அனுப்பிய ஏஜன்ட் பழனிவேல் மீதும், கூரியர் நிறுவன ஊழியர் செந்தில் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.