கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே குப்பச்சிவலசை செந்தில்குமார் மனைவி இந்திரா. கடந்தாண்டு ஜூன் 16ல் வீட்டு பீரோவில் வைத்திருந்த, 9 பவுன் நகை மாயமானது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. போலீசாரின் விசாரணைக்கு பயந்து புகார் செய்யவில்லை. நேற்று முன்தினம் இந்திரா, திருப்புல்லாணியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்ற போது, உறவினர் ராக்கமுத்து, 22, அங்கு இருந்தார். விசாரித்ததில், "அடகு வைத்த நகையை திருப்புவதற்கு வந்ததாக' தெரிவித்தார். வங்கி மேலாளர் நகையை, ராக்கமுத்துவிடம் ஒப்படைத்த போது, அது காணாமல் போன தனது நகை என தெரிந்து, இந்திரா, அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, கீழக்கரை இன்ஸ்பெக்டர் கணேசனிடம், புகார் அளித்தார். ராக்கமுத்துவிடம் விசாரித்ததில், திருடியதை ஒப்புக்கொண்டு, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகையை ஒப்படைத்தார். திருப்புல்லாணி எஸ்.ஐ., கோட்டைச்சாமி வழக்கு பதிவு செய்து, ராக்கமுத்துவை கைது செய்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.