திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில், பொதுப்பணித்துறையின் அனுமதி ரசீது பெறாமல் மணல் அள்ளிய 200 மாட்டுவண்டிகள் பல மணிநேரம் காத்திருந்தன. திருப்புவனம் வைகை ஆற்றில் மாட்டுவண்டிகளில் மணல் அள்ள வருவாய், பொதுப்பணித்துறையினர் தடை விதித்திருந்தனர். மூன்று மாதமாக மணல் அள்ளாததால், கட்டுமானப்பணிகள் முடங்கின. குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் மணல் அள்ள வருவாய், பொதுப்பணித்துறையினர் அனுமதி வழங்கினர். அதன்படி, திருப்புவனம் புதூர் செல்லப்பனேந்தல் விலக்கு அருகே மணல் அள்ள அனுமதித்தனர். பொதுப்பணித்துறையினரிடம் ரூ.42 க்கு அனுமதி சீட்டு வாங்கிய பின்னரே மணல் அள்ளவும்,காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை மட்டுமே மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனை மீறிய மாட்டுவண்டிக்காரர்கள் அதிகாலை 4 மணிக்கெல்லாம் வைகை ஆற்றில் மணல் அள்ள துவங்கினர்.முறையான அனுமதி சீட்டு பெறாமல் மணல் அள்ளிய 200 மாட்டுவண்டிகளுக்கு, பொதுப்பணித்துறையினர் ரசீது தர மறுத்ததால், வைகை ஆற்றுக்குள் பல மணி நேரம் காத்திருந்தனர்.
மதுரை மாவட்டம் வடக்கூர், சக்குடி, கருப்பாயூரணி பகுதியிலிருந்து வந்த மாட்டுவண்டிகளுக்கு, உள்ளூர் மாட்டுவண்டிக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல மணி நேரம் காத்திருந்த மாட்டுவண்டிகளுக்கு, வருவாய், பொதுப்பணித்துறையினர் கலந்தாலோசித்து, பின்னர் அனுமதி ரசீது வழங்கினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.