கடலூர்: கடலூரில் ஏற்பட்ட தீ விபத்தில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் ஏழு வீடுகள் எரிந்தது சாம்பலாகின. கடலூர், வசந்தராயன் பாளையத்தைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி, 35; கூலித் தொழிலாளி. இவரது வீட்டில் நேற்று மதியம் மின் தடைபட்டதால், மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தார். திடீரென தீ கூரை மீது பரவியது. அருகில் இருந்த ரகுமான் வீட்டிலும் தீ பரவியது. அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். ரகுமான் வீட்டில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. அதனால் அடுத்தடுத்த வீடுகளும் எரிந்தன. சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் ஏழு வீடுகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. "டிவி', கிரைண்டர், மிக்சி, பீரோ, துணிகள், பாத்திரங்கள் உட்பட, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், எரிந்து கருகின. வீடுகளில் இருந்து பொருட்களை மீட்க முயன்ற போது, தீ விபத்தில் படுகாயமடைந்த அஷ்ரப்அலி, ரகுமான் ஆகியோர், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாசில்தார் எழிலன், நகராட்சித்தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் பார்வையிட்டு, தீ விபத்தில் பாதித்த ஏழு குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி, அரசின் நிவாரண உதவிகளை வழங்கினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.