வேலூர்: வேலூர் அருகே, ஆம்னி பஸ் - கார் நேருக்கு நேர் மோதியதில், ஐந்து பேர் பலியாயினர். டிரைவர்கள் இரண்டு பேரும் தூங்கியதால், விபத்து நடந்ததாக தெரிந்தது.
சொகுசு பஸ் : திருப்பூர் மாவட்டம், இடுவம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மகாலட்சுமி, உறவினர்கள் மகேஷ், ராஜேஸ்வரி ஆகியோருடன் சிகிச்சைக்காக, வேலூர், சி.எம்.சி., மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, "டயோட்டா - இத்தியாஸ்' காரில் புறப்பட்டனர்; காரை, பல்லடத்தைச் சேர்ந்த டிரைவர் சுரேஷ் ஓட்டினார்.
சென்னையில் இருந்து, பெங்களூரு நோக்கி, "சர்மா' நிறுவனத்தை சேர்ந்த சொகுசு, "ஏசி' ஆம்னி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை, பெங்களூரைச் சேர்ந்த இஸ்மாயில், 34, ஓட்டி வந்தார்.
வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி, பங்களா மேடு அருகே, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு காரும், ஆம்னி பஸ்சும் நேருக்கு நேர் மோதியது; கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், காரில் இருந்த முருகேசன், 50, மகாலட்சுமி, 40, மகேஷ், 30, ராஜேஸ்வரி, 25, ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
டிரைவர் கைது : படுகாயங்களுடன் உயி ருக்கு போராடிக் கொண்டிருந்த கார் டிரைவர் சுரேஷை, அப்பகுதியில் உள்ள மக்கள் மீட்டு, வாணியம்பாடி அரசு மருத் துவமனைக்கு செல்லும் வழியில், இறந்தார். கார் டிரைவரும், ஆம்னி பஸ் டிரைவரும் தூங்கி விட்டதால், விபத்து நடந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிந்தது. நாட்றம்பள்ளி போலீசார் விசாரித்து, சர்மா பஸ் டிரைவர் இஸ்மாயிலை கைது செய்தனர். விபத்து நடந்த சர்மா பஸ்சில் இருந்த, 30க்கும் மேற்பட்ட பயணிறகளை பஸ் நிர்வாகத்தினர் கண்டு கொள்ளவில்லை. அதனால், அவர்கள் கொண்டு வந்த லக்கேஜுகளுடன் நாட்றம்பள்ளி மற்றும் பர்கூருக்கு நடந்து சென்று, மாற்று பஸ் பிடித்து பெங்களூரு சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.