சென்னை : அரசு வங்கியில், 11 லட்சம் கையாடல் செய்த ஊழியரை, கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுத்தது.
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில், அரசு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் காசாளர் நேற்று மதியம், கணக்கு முடித்து, பண கட்டுகளை மேஜையில் வைத்துவிட்டு, உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது, அதே வங்கியில் வேலை பார்த்து வரும் சக ஊழியர், மேஜையில் இருந்த பண கட்டுகளை, பேன்ட் பாக்கெட்டில் திணித்துவிட்டு, ஒன்று தெரியாதது போல் அமர்ந்து கொண்டார். காசாளர் கணக்கை சரிபார்த்தபோது, 11 லட்சம் ரூபாய் குறைந்தது. வாடிக்கையாளர்களிடம் ஏமாந்து விட்டோமா என, 100 முறைக்கு மேல் கணக்குகளை சரிபார்த்துள்ளார். அப்போதும் பணம் குறைந்தது. இது பற்றி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளித்து, விசாரணை துவங்கியது.
வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவை, போலீசார் பரிசோதித்த போது, சக ஊழியர் ஒருவர், பண கட்டுகளை எடுத்து பதுக்குவது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.