Advertisement
விவசாயிகள் மறியல் போராட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பகுதியை காவிரி டெல்டா பாசன பகுதியில் சேர்க்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடந்தது. கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 38 கிராமங்களில் விவசாயிகள் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல்லும், 2,500 ஏக்கர் பரப்பளவில் கரும்பு உள்ளிட்ட பயிர்களை செய்து வருகின்றனர். தமிழக அரசு, டெல்டா பாசன பகுதிகளில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீமுஷ்ணம், சோழதரம், ஆனந்தகுடி உள்ளிட்ட 38 கிராமங்களை தற்போது நீக்கியுள்ளது.

இதனால் விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வந்த 12 மணி நேர மும்முனை மின்சாரம் மூன்று மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனப் பகுதியில் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்க்க வேண்டும். விவசாயத்திற்கு 12 மணி நேரம் மின்சாரம் வழங்க வலியுறுத்தியும் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் ஸ்ரீமுஷ்ணத்தில் நேற்று கடையடைப்பு நடந்தது. மின்வாரிய உதவி செயற் பொறியாளர் கண்ணகி, வேளாண்மை அலுவலர் கனகசபை ஆகியோர் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.