Police enquires woman burnt death | இளம் பெண் எரித்துக்கொலை : போலீசார் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம் பெண் எரித்துக்கொலை : போலீசார் விசாரணை

Added : டிச 28, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இளம் பெண் எரித்துக்கொலை :  போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூரில், கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட பெண் சடலத்தை, நேற்று மீட்ட போலீசார், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, விசாரித்து வருகின்றனர். திருப்பூர் அருகே, அரிஜன காலனி அடுத்துள்ள காட்டு பகுதியில், 25 வயது மதிக்கத்தத்க பெண் ஒருவர், கொலை செய்யப்பட்டு, அடையாளம் தெரியாதபடி, எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். அப்பகுதி மக்கள், பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பெண் யார்; எந்த ஊரை சேர்ந்தவர் என, தெரியவில்லை. கோவையில் இருந்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய், 2 கி.மீ., தொலைவில் உள்ள ஏ.பி., நகர் வரை ஓடி, ஒரு இடத்தில் நின்று விட்டது. தடய அறிவியல் நிபுணர்கள், உடலில் தடயங்களை சேகரித்தனர்.

போலீசார் கூறியதாவது: பெண்ணின் கழுத்தை, கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளனர். காலில் கொலுசு, மெட்டி, கையில் மோதிரம் அப்படியே உள்ளன. தங்கத்துடன் கூடிய தாலி, சடலத்தின் அருகே கிடந்தது. நகைக்காக கொலை செய்யப்படவில்லை என, தெரிகிறது. கொலை செய்து, சடலத்தை இங்கு கொண்டு வந்து, அடையாளம் தெரியாதவாறு எரித்துள்ளனர்.
வெளியாட்கள், ஊருக்குள் இருக்கும் காட்டுப்பகுதிக்கு சடலத்தை கொண்டு வந்து எரிக்க, வாய்ப்பு குறைவு. சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும். பெண் யாராவது காணாமல் போய் இருக்கின்றனரா என, விசாரித்து வருகிறோம். கொலை செய்யப்பட்ட பெண் யார் என, தெரிந்ததும், கொலைக்கான காரணம் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை