Advertisement
தயாநிதியிடம் விசாரணை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2012,00:34 IST

மதுரை: மதுரையில், கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில், நேற்று (டிச., 27) தயாநிதி அழகிரியிடம், இரண்டு மணி நேரம் போலீசார் விசாரித்தனர். கீழவளவு ஒலிம்பஸ் குவாரியில் முறைகேடு நடந்ததாக, பங்குதாரர்களாக இருந்த தயாநிதி, நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமின் பெற்ற தயாநிதி, தினமும் கீழவளவு ஸ்டேஷனில் கையெழுத்திடுகிறார். அவர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது. நேற்று காலை, 11:30 மணிக்கு, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் தயாநிதி ஆஜரானார். அவரிடம் தனியாக ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன், டி.எஸ்.பி., தங்கவேல் விசாரித்தனர். பங்குதாரராக இருந்தபோது நடந்த பணப் பரிவர்த்தனைகள், அப்போது வாங்கிய சொத்துகள், வருமான வரி விவரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டது. இவ்வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்கள் கொடுத்த தகவலின்படி, கேள்விகள் கேட்கப்பட்டன. பல கேள்விகளுக்கு "தனக்கு சம்பந்தமில்லை' என்று கூறினார். "மீண்டும் அழைத்தால், விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என்ற நிபந்தனையுடன், மதியம் 1:30 மணிக்கு விடுவிக்கப்பட்டார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Guru - Batam,இந்தோனேசியா
28-டிச-201214:02:49 IST Report Abuse
Guru அதுதான் கலைக்டர் (மாவட்ட ஆட்சியர்) அலுவலகம் எரித்து விட்டதே, இனிமேல் என்ன பயம்..
Rate this:
0 members
0 members
10 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.