மதுரை: தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, டி.கள்ளிப்பட்டி நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டியதான வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரிய மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. பெரியகுளம், டி.கள்ளிப்பட்டி சுப்புராஜ் தாக்கல் செய்த மனு: என் மகன் நாகமுத்து. இவர், கைலாசநாதர் கோவிலில் பூஜை செய்து வந்தார். கோவிலை விட்டு வெளியேறுமாறு பழனிச்சாமி, வெங்கிடசாமி மிரட்டினர்; சிலர் தாக்கினர். மே 5ல், போலீசில் புகார் செய்தோம். வழக்குப் பதியவில்லை. புகாரை வாபஸ் பெறுமாறு, பெரியகுளம் நகராட்சி தலைவர் ஓ.ராஜா மிரட்டினார். அவர், தமிழக நிதி அமைச்சரின் சகோதரர். புகாரை வாபஸ் பெற, பெரியகுளம் டி.எஸ்.பி., மற்றும் உமா, தென்கரை இன்ஸ்பெக்டர் வலியுறுத்தினர். தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, தேசிய மனித உரிமைகள் கமிஷனிடம் புகார் செய்தோம். புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, ஏற்கனவே, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தோம். தென்கரை இன்ஸ்பெக்டர் விசாரிக்க, கோர்ட் உத்தரவிட்டது. நாகமுத்து, டிச., 7ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர், "தற்கொலை செய்து கொள்ள, ஓ.ராஜா தான் காரணம்' என, கடிதம் எழுதி வைத்துள்ளார். இவ்வழக்கை தமிழக போலீசார் விசாரிக்க, தடை விதிக்க வேண்டும்; சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி, சி.எஸ்.கர்ணன் முன், மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையை ஜன., 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.