சென்னை: நடிகர் விஷால், திரிஷா நடித்த, "சமர்' படத்தை வெளியிட, தடை கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை, இன்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த, ஆனந்த் சினி சர்வீஸ் நிறுவனம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு: படப்பிடிப்புக்கான சாதனங்களை, நாங்கள் வாடகைக்கு விடுகிறோம். நடிகர் விஷால், திரிஷா நடித்த, சமர் படத்தை, பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்துக்காக பயன்படுத்திய சாதனங்களுக்கு, வாடகையாக, 58 லட்சம் ரூபாய், எங்களுக்கு தர வேண்டும். ஏற்கனவே, "ஒஸ்தி' படத்துக்காக, 62 லட்சம் ரூபாய், பாக்கி தர வேண்டியதுள்ளது. மொத்தத்தில், 1.20 கோடி ரூபாய், எங்களுக்கு தர வேண்டியதுள்ளது. படத்தை வெளியிட அனுமதித்தால், எங்களுக்கு பணம் வராது. எனவே, சமர் படத்தை வெளியிட, தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதி வெங்கட்ராமன் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை, இன்றைக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.