சென்னை: நடிகர் கமல் நடித்துள்ள, "விஸ்வரூபம்' படத்தை வெளியிட, தடை கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, கமல் உள்ளிட்டோருக்கு, தனிப்பட்ட முறையில், "நோட்டீஸ்' வழங்க, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விசாரணை, ஜன., 3ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. "ரெஜன்ட் சாய்மீரா என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு: நடிகர் கமலின் திரைக்கதையில், அவரே நடித்து, இயக்கும், "மர்மயோகி' என்ற படத்தை தயாரிப்பதற்கு, எங்கள் நிறுவனமும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், 2008ம் ஆண்டு, ஏப்ரலில், ஒப்பந்தம் செய்தது. இதற்காக, எங்கள் நிறுவனம், வெவ்வேறு தேதிகளில், 6.90 கோடி வரை, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியது. ஒப்பந்தம் போட்டு, ஆறு மாதங்கள் வரை, படப்படிப்பு துவங்கவில்லை. இப்படத்துக்காக, வேறு ஒரு பங்குதாரரை தேடுவதாக, ராஜ்கமல் பிலிம்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, நாங்கள் அளித்த தொகை, 6.90 கோடி ரூபாயை, திருப்பி தர வேண்டும். முன்பணமாக, கமல் பெற்ற, நான்கு கோடி ரூபாயை, திருப்பித் தரவில்லை. படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில், எங்கள் நிறுவனத்துக்கு, 10.50 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பணத்தை திருப்பித் தரக் கோரி, சிவில் வழக்கு தொடுத்துள்ளோம்; வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், விஸ்வரூபம் படத்தை, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டிரெய்லர், "யு-டூப்'பில் வெளியிடப்பட்டது. ஜன., 11ம் தேதி, விஸ்வரூபம் படம் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தை வெளியிட அனுமதித்தால், எங்களுக்கு வர வேண்டிய பணத்துக்கு உத்தரவாதம் இல்லை; பணத்தை திரும்பப் பெற முடியாது. எனவே, கமல் நடித்து, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள, விஸ்வரூபம் படத்தை, எந்த ரூபத்திலும் வெளியிட, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதி வெங்கட்ராமன் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், நடிகர் கமலுக்கு, தனிப்பட்ட முறையில், "நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவிட்டார். விசாரணையை, ஜன., 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.