43 மணி நேரம் தொடர் யோகாசனம் செய்து சாதனை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

உடுமலை:உடுமலையில், 43 மணி நேரம் தொடர்ந்து யோகாசனங்களை மேற்கொண்டு யோகாசன ஆசிரியர் குணசேகரன் சாதனை படைத்தார்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே முக்கோணம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், 41. இவர் முக்கோணம் பகுதியில், மரகதம் யோகாலயம் மையத்தை நடத்தி வருகிறார்.

இவர், "அதிக நேரம் தொடர்ந்து நிகழ்த்தப்படும் யோகாசனம்' எனும் சாதனை முயற்சியை கடந்த 25ம் தேதி உடுமலை ஐ.எம்.ஏ., ஹாலில் துவக்கினார். அன்று காலை 6:01 மணி முதல் நேற்று காலை 8:00 மணி வரை (அதாவது 43 மணி நேரம் இடைவிடாது) யோகாசனங்களை நடத்தி சாதனை புரிந்தார்.

இச்சாதனையை, எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் (இங்கிலாந்து), ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி (சிங்கப்பூர்), இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி (மும்பை), தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ( சென்னை) மற்றும் யுனிக் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஆகிய உலக சாதனை நிறுவனத்தின் சார்பில், பிரதிநிதிகள் ஆய்வு செய்து, சான்றிதழ்களை வழங்கினர். யோகாசன ஆசிரியர் குணசேகரன் கூறியதாவது:

மிக அதிக நேரம் தொடர்ந்து நிகழ்த்தப்படும் யோகாசனம் (ஆண்-தனிநபர்) என்ற சாதனையை செய்துள்ளேன். இதற்கு முன்பு யுனைடெட் ஸ்டேட்ஸ் டோமினிக் மைக்கேல் என்ற மாணவன் 36 மணி நேரம் 4 நிமிடங்கள் செய்திருந்தார். இந்தியாவை சேர்ந்த ஒரு நபர் இச்சாதனையை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால், இச்சாதனையை செய்தேன்.

ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரமாவது அனைவரும் யோகா செய்தால், உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும் என்ற கருத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகத்தான் இச்சாதனையை செய்தேன்.இவ்வாறு குணசேகரன் கூறினார்.

-நமது நிருபர்-

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivasankaran - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-டிச-201200:16:07 IST Report Abuse
sivasankaran மிக நல்ல செய்தி. யோகாசனம் பள்ளி கல்வியில் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டு அது கண்டிப்பாக 12ம் வகுப்பு வரை கட்டாய உடற்கல்வியாக செயலாக்கம் பெறவேண்டும். யோகாசனம் உடலை மட்டும் பேணுவதில்லை.அது உள்ளத்தையும் வலிமை பெற செய்கிறது.இதனால் தனி மனித ஒழுக்கத்தை வளர்க்க முடியும்.மேலும் இது ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியாக கொள்ளப்படும். அரசு உடனடியாக இதனை செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.நன்றி சிவா.
Rate this:
Share this comment
Cancel
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
29-டிச-201207:28:14 IST Report Abuse
Prabhakaran Shenoy பல்லாண்டுகலாக இந்திய சவாசனம் செய்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Mahalakshmi Kousalya - Karur,இந்தியா
28-டிச-201209:50:38 IST Report Abuse
Mahalakshmi Kousalya வாழ்த்துக்கள் திரு குணசேகரன் அவர்களே
Rate this:
Share this comment
Kavi - Udumalpet,இந்தியா
28-டிச-201212:37:21 IST Report Abuse
Kavicongratulations.. U done a great job.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்