தர்மபுரி: ஒகேனக்கல் கூட்டு குடி நீர் சோதனை ஓட்டம் நேற்று துவங்கியது.தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலத்தடி நீரில் உள்ள ஃப்ளோரைடு காரணமாக, இப்பகுதி மக்கள் பல்கறை படிதல், எழும்புகள் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இவ்விரு மாவட்ட மக்களின் நலன் கருதி, கடந்த, 2008ம் ஆண்டு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிக்கு, ஆயிரத்து330 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 2010ம் ஆண்டு ஆயிரத்து, 928 கோடியே, 80 லட்சமாக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்தது.இத்திட்டம் ஐந்து தொகுப்புகளாக செயல்படுத்தப்பட்டு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள, மூன்று நகராட்சிகள் மற்றும் 18 பஞ்சாயத்து யூனின்கள் உட்பட மாவட்டம் முழுவதும் இத்திட்ட பணி நடந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் குழாய் அமைக்கும் பணி மற்றும் குடிநீர் தொட்டி அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இறுதி கட்ட பணிகள் விரைவாக நடந்து வருகிறது.ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணி, தர்மபுரி மாவட்டத்தில் முழுமை அடைந்துள்ளதை அடுத்து, சில மாதங்களாக ஆங்காங்கே உள்ள இணைப்புகள் மூலம், தண்ணீர் செல்லும் வேகத்ததை அளவிட, வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு குழாய்களில் சோதனை செய்யப்பட்டு வந்தது.
அப்பணி முடிந்ததை தொடர்ந்து பென்னாகரம் அடுத்த மடத்தில் இருந்து தர்மபுரி மற்றும் அரூர், பாலக்கோடு பகுதிக்கு சோதனை ஓட்டம் மற்றும் நீரின் உந்து சக்தி அளக்கும் பணி நேற்று காலை துவங்கியது.
காலை, 5,30 மணிக்கு மடத்தில் சிறப்பு பூஜை நடந்தது. அங்கிருந்து தர்மபுரி, பாலக்கோடு, அரூர் பகுதிகளுக்கு நீர் திறந்து விடப்பட்டது. மடத்தில் இருந்து தர்மபுரி வரை, 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, "ஸ்பர் பைக்கள்' மூலம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்கள் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இணைப்புகள் மூலம் தண்ணீரை திறந்து விட்டு சோதனை செய்தனர்.
தர்மபுரி மதிகோன்பாளையத்தில் உள்ள, "ஸ்பர் பைப்' மூலம் மதியம், 2.30 மணிக்கு தண்ணீர் வரத்து மற்றும் வேகம் சோதனை செய்யப்பட்டது. சோதனையின் போது குழாயில் இருந்து மண் கலந்த நீர் அதிவேகமாக கொட்டியது.
தொடர்ந்து தர்மபுரி நெசவாளர் காலனி மற்றும் அம்பேத்கர் காலனியில் உள்ள மெகா நீர் தேக்க தொட்டிகளுக்கு நீர் ஏற்றி சோதனை செய்யப்பட்டது. இதே போன்று பாலக்கோடு பகுதியிலும், அரூர் பகுதிகளிலும், "ஸபர் பைப்'புக்கள் மூலம் சோதனை செய்யப்பட்டது. "வரும் ஃபிப்ரவரி மாதம் இறுதியில் பொதுமக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்படும்' என, திட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
Our sincere thanks to former CM Dr. Kalaignar and former Dy. CM Thiru. Stalin who worked tirelessly for this project in spite of baseless accusations from JJ and Dr. Ramadoss etc. Can anyone name a single project in JJ's Govt so far now and in her previous govts.? AIADMK Sombugal will talk about the corruption only as if JJ is corruption free. Judgement day is in sight at Bangalore. Corruption is corruption if it is 5 rupees or 50000 crores.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.