விருதுநகர்: இந்தியா முழுவதும், 2012 ல் நடந்த ரோடு விபத்துக்களில், தினமும் 504 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, 2013 ஜன., 1 முதல் 7 வரை, சாலை பாதுகாப்பு வாரம் நடத்த, இந்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் 2011 ல், நடந்த ரோடு விபத்து புள்ளி விபரப்படி, ஒரு மணி நேரத்திற்கு 17 பேர் வீதம், தினம் 408 பேர் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டில்(2012) ஒரு மணி நேரத்திற்கு 21 பேர் வீதம், தினமும் 504 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மட்டும், ஆயிரத்திற்கு 35 வாகனங்கள், தினமும் விபத்தில் சிக்குகின்றன. அதில், 20 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள், நான்கு நிமிடத்திற்கு ஒருவர் வீதம் பலியாகிறார்கள். விபத்தை குறைத்து பலியை தடுக்க, மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், அதை சுற்றிய பகுதிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, சாலை பாதுகாப்பு வாரம் குறித்து, சிறப்பு வாசகமும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ""குடிபோதையில் வாகனத்தை ஓட்டாதே, வாழ்க்கை வாழ்வதற்கே'' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.