Virudunagar-manamadurai train service begins at march end | விருதுநகர்- மானாமதுரை ரயில் போக்குவரத்து 2013 மார்ச் இறுதியில் துவங்கும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகர்- மானாமதுரை ரயில் போக்குவரத்து 2013 மார்ச் இறுதியில் துவங்கும்

Added : டிச 28, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருதுநகர்: ""விருதுநகர்- மானாமதுரை இடையேயான அகல ரயில் போக்குவரத்து , 2013 மார்ச் இறுதியில் துவங்கும்,'' என, தலைமை நிர்வாக அதிகாரி(கட்டுமானம்) விஜயகுமரன் தெரிவித்தார். இப்பாதையை டிராலியில் சென்று ஆய்வு செய்த அவர், கூறியதாவது: விருதுநகர், மானாமதுரை தவிர்த்து, அருப்புக் கோட்டை, திருச்சுழி, நரிக்குடி ஆகிய ஊர்களில், ரயில் நின்று செல்லும் வகையில், ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
"சிக்னல் பாயின்ட்' அமைக்கும் பணி முடிந்த நிலையில், சோதனை பணி மட்டும் நடக்க உள்ளது. இந்நிலையில், தண்டவாளங்களில் கொட்டப்படும் ஜல்லி, பேக் ஒர்க் வேலை, 45 சதவீதம் உள்ளது. இவை, 45 நாட்களுக்குள் முடிந்து விடும். 2013 மார்ச் இறுதியில் , ரயில் போக்குவரத்து துவங்கப்படும்,என்றார். தலைமை சிக்னல் தொலை தொடர்பு இன்ஜினியர் இளவரசன், தலைமை இன்ஜினியர் ரவீந்தரன் உடனிருந்தனர். ஆய்வு குறித்து அதிகாரிகளுடன், மாணிக்கம் தாகூர் எம்.பி., ஆலோசனை நடத்தினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை