தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலிருந்து, நேற்று, இளம் பெண்ணால் கடத்திச்செல்லப்பட்ட, 7 மாத ஆண் குழந்தை, இரண்டரை மணி நேரத்தில் மீட்கப்பட்டது. திருச்செந்தூர், உடன்குடியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சிவன் பெருமாள்,25. இவரது மனைவி அனிஷ் பாத்திமா,20. இரண்டு ஆண்டிற்கு முன்பு காதல் திருமணம் செய்த இவர்களுக்கு, முத்துராமலிங்கம் என்ற, 7 மாத ஆண் குழந்தை உள்ளது. வயிற்று வலிக்கு சிகிச்சை பெற, அனிஷ் பாத்திமா, நேற்று காலை, 10:30 மணிக்கு, கணவர், குழந்தையுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர்களை பின்தொடர்ந்து வந்த, 19 வயது இளம்பெண், தன் ஊர் சிவகாசி எனக்கூறி, வலிய வந்துபேசினார். அனிஷ் பாத்திமா, டாக்டரிடம் பரிசோதனைக்கு செல்ல, புறநோயாளிக்கான அனுமதி சீட்டு வாங்கச் சென்றார். அப்போது, சிவன்பெருமாளிடம் பேச்சுக்கொடுத்த அப்பெண், குழந்தையை, தன்னிடம் தந்துவிட்டு, சீட்டு வாங்க சிவன்பெருமாளையும் வரிசையில், நிற்கும்படி கூறினார்.
குழந்தை கடத்தல்: அவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு சீட்டுவாங்கச் சென்ற இருவரும், திரும்பிவந்தபோது, அப்பெண்ணையும், குழந்தையையும் காணவில்லை. குழந்தையை அவர் கடத்தியது தெரியவந்தது. சிவன் பெருமாள், தென்பாகம் போலீசில் புகார்செய்தார். எஸ்.பி., அலுவலகம் மூலம், இத்தகவல் மாவட்டம் முழுவதும் போலீசாருக்கு வயர்லஸ் மூலம் தெரிவிக்கப்பட்டு, தீவிர வாகன சோதனை நடந்தது. இதனிடையே, தூத்துக்குடியிலிருந்து, புதுக்கோட்டைக்கு குழந்தையுடன் பஸ்சில் சென்ற அந்தபெண், போலீசார் வாகன சோதனை நடத்துவதை பார்த்து, தன்னை கைது செய்து விடுவார்களோ, என பயந்து, புதுக்கோட்டையில் இறங்கி, குழந்தையை தெருவில் போட்டுவிட்டுச் சென்றார்.
தெருவில் கிடந்த குழந்தையை, பிற்பகல், 1 மணிக்கு பொதுமக்கள், மீட்டு, புதுக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். அங்கிருந்து குழந்தை மீண்டும் தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டு, 2:30 க்கு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடத்திய பெண் யார், எதற்காக குழந்தையை கடத்த முயன்றார்? என, விசாரணை நடந்து வருகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.