சண்டிகார்:பஞ்சாபில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண், 44 நாட்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில், குற்றவாளிகளை கைது செய்யாத இரண்டு போலீசார் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.பாட்டியாலாவை சேர்ந்த இளம்பெண், நவம்பர், 13ம் தேதி, தீபாவளியன்று, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் நிலையத்தில், இளம் பெண் புகார் அளித்தார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக பல்விந்தர் சிங் மற்றும் குர்பிரித் சிங் ஆகியோர் மீது போலீசார், சில தினங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, இந்த வழக்கில் சரிவர செயல்படாத, உதவி போலீஸ் எஸ்.ஐ., உட்பட இருவரை டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். டி.எஸ்.பி., ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
\
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இப்போது நடை முறையில் உள்ள சட்டங்களை வைத்து கொண்டு எந்த குற்றம் செய்தவராயினும், குற்றம் செய்தவரை காட்டிலும், சட்டத்தை செயல் படுத்தாத ஊழியர்கள், போலீஸ், மற்றும் அரசு ஊழியர்களை நோக்கியே தண்டனை செல்கிறது குற்றம் சாட்டப்பட்டவருக்கும், குற்றவாளிகளுக்கும் உள்ள பாதுகாப்பு அரசு அதுகாரிகள், நீதிபதிகள், மற்றும் போலிசுக்கு இல்லை முதலிலேயே, கற்பழித்ட குற்றவாளிகள் என்று தெரிந்த வுடனே நீதி, நியாயம், சட்டம், உரிமை என்று நேரத்தை வீணாக்காமல் நாடு ரோடில் போட்டு தள்ளியிருந்தால், அடுத்தடுத்து நடை பெறுகின்ற குற்றங்கள் உடனடியாக நிற்கும். இல்லாமல் இப்படி செய்து கொண்டே போனால் நாளை போலீஸ் வேலைக்கே யாரும் வர விருப்ப படமாட்டார்கள். அதையும் நாம் வேடிக்கை பாப்போம்(பொதுமக்கள்) அதற்கு அடுத்து போலீஸ் வேலைக்கு ஏன் ஆட்கள் வருவதில்லை என்று அரசு ஒரு கமிட்டி அமைத்து காரணங்கள் தேடும், குற்றங்கள் பெருகும் இவையெல்லாம் நடக்க அதிக தூரமில்லை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.