ஆமதாபாத்:குஜராத்தில், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, குஜராத் ஐ கோர்ட் உறுதிபடுத்தியது.ஆமதாபாத்தில், 2003ம் ஆண்டில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அப்போது, தன் ஆண் நண்பர் ஷாஜல் என்பவருடன் சென்ற, 24 வயது உடைய பெண்ணை, ஐந்து பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து, 2004, ஜனவரி 7ல் அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த ஆமதாபாத் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, ஜோஸ்த்னா யாஜ்னிக், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, ஷாஜல், அவரது நண்பர்களான சந்தன், அசோக் ஜெய்ஸ்வால், சுகம் ஜெய்ஸ்வால் மற்றும் தர்மேந்திரா ஜெயின் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதை எதிர்த்து, குற்றவாளிகள் தரப்பில், குஜராத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, குஜராத் ஐகோர்ட்டில், நீதிபதிகள் ஜெயந்த் பட்டேல் மற்றும் மோகிந்தர் பால் ஆகியோர் அடங்கிய "பெஞ்ச்', முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செஷன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பை நீதிபதிகள் உறுதிபடுத்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதுதான் இந்திய அரசியல் சட்டம். ஒரு குற்றம் புரிந்து 10 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு உறுதி செய்யபடுகின்றது. இன்னும் முடியவில்லை. குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவார்கள். பின்னர் ஸ்பெஷல் பெஞ்ச் விசாரணைக்கு முறையிடுவார்கள். இதெல்லாம் கடந்து தீர்ப்பு வழங்குவதற்குள் இவர்கள் பல் கொட்டி கிழவனாகி இறந்துவிடுவார்கள். இறந்த பின்பு தூக்கு தண்டனை என்று தீர்ப்பு வரும். அதற்க்கு ஜனாதிபதி கருணை அடிப்படையில் மன்னிப்பு அளிப்பார்.பணமும், அரசியல் பலமும் இருந்தால் இந்த நாட்டில் எந்த குற்றமும் செய்யலாம். தண்டனை கிடையாது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.