புதுடில்லி:"காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பினை, காவிரி நதியுடன் தொடர்புடைய மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் அரசிதழில் வெளியிட கூடாது' என, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.
டில்லியில், நேற்று நடைபெற்ற தேசிய வளர்ச்சி குழும கூட்டத்தில் பங்கேற்ற, ஷெட்டர் மேலும் கூறியதாவது: நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், கர்நாடகா மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், காவிரி நதிநீர் தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை, சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் கலந்து ஆலோசிக்காமல், அரசிதழில், மத்திய அரசு வெளியிடக் கூடாது. இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.