tamilnadu road conditioon: very poor | தமிழகத்தில் 16 ஆயிரம் கி.மீ., சாலைகள் மோசம் ரூ.70 கோடி ஒதுக்கியும் பயனில்லை| Dinamalar

தமிழகத்தில் 16 ஆயிரம் கி.மீ., சாலைகள் மோசம் ரூ.70 கோடி ஒதுக்கியும் பயனில்லை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
தமிழகத்தில் 16 ஆயிரம் கி.மீ., சாலைகள் மோசம் ரூ.70 கோடி ஒதுக்கியும் பயனில்லை

மதுரை:தமிழகத்தில், 16 ஆயிரம் கி.மீ., சாலைகள் பராமரிப்பு இன்றி, மோசமாக உள்ளன. 2012-13 ஆண்டுக்கு 70 கோடி ரூபாய் ஒதுக்கியும் பணிகள் நடக்கவில்லை.பழுதான பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்கள், பழைய சாலைகளை புதுப்பித்தல், சாலைகளை மேம்படுத்துதல், விரிவாக்கச் சாலைகள் குறித்து, ஆண்டு தோறும் ஏப்ரலில், மாநில நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மேற்கொள்ளும். மேம்பாட்டு பணிக்கான திட்ட மதிப்பீடு குறித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். பின், டெண்டர் விடப்பட்டு, மார்ச்சில் பணிகள் துவங்கும். தமிழகத்தில், 2012-13 க்கான ஆய்வுகள், ஏப்ரலில் முடிக்கப்பட்டன. இதன்படி, பழுதான 16 ஆயிரம் கி.மீ., சாலைகளை பராமரித்தல், பழுதான பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்கள் கட்டுதல் உட்பட நெடுஞ்சாலையின் மேம்பாட்டுப்பணிகளுக்காக, 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மாவட்டம் தோறும் உட்கோட்ட அளவில் ஒப்பந்ததாரர் ஒருவரிடம், பணிகளை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

உதாரணமாக, மதுரையில் வடக்கு, தெற்கு, மேலூர், திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டி என ஆறு உட்கோட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு உட்கோட்டத்திலும், ஒரு கோடி ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், சாலை மேம்பாட்டுப்பணிகள் நடக்கும். உட்கோட்ட அளவில் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் பணிகள் ஒதுக்குவதால், சிறிய ஒப்பந்ததாரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. ஒப்பந்தம் எடுத்தவர் மனது வைத்தால் மட்டுமே, அவர்களிடம் சிறிய ஒப்பந்ததாரர்கள், "சப்-கான்ட்ராக்ட்' ஆக வேலை பார்க்க இயலும்.

எதிர்ப்பு:இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறிய ஒப்பந்ததாரர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், 2011-13 ல், 16 ஆயிரம் கி.மீ., சாலைகள் உட்பட மேம்பாட்டு பணிகள் நடக்கவில்லை. தற்போது, 2013-14 க்கான சாலை மேம்பாட்டு பணி ஆய்வுகள் நடக்கின்றன. எனவே, புதிய பாலங்கள், பல கி.மீ., தொலைவுள்ள சாலைகளை அமைக்கும் பணிகளை பெரிய ஒப்பந்ததாரர்களிடமும்; பழுதான பாலங்களை புதுப்பித்தல், சாலை பராமரிப்பு போன்ற பணிகளை சிறிய ஒப்பந்ததாரர்களுக்கும் ஒதுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (24)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kamarud - ooty,இந்தியா
28-டிச-201220:55:54 IST Report Abuse
kamarud ரூ.70 கோடி ஒதுக்கியும் பயனில்லை என்று எப்படி சொல்லலாம் ? கண்டிப்பாக கொஞ்சம் பேருக்கு பயன் இருந்திருக்கும் வெளியே சொல்வார்களா என்ன ???????????
Rate this:
Share this comment
Cancel
Balasubramaniam Rajangam - MADURAI,இந்தியா
28-டிச-201220:50:26 IST Report Abuse
Balasubramaniam Rajangam போடும் அரைகுறை ரோட்டையும் கட்சி மீட்டிங், கல்யாணம், காதுகுத்து, என பந்தல் போட ரோட்டில் குழி தோண்டி அதில் மழை நீரை தேக்கி ஒரு மாதத்தில் ரோடு பாலம் பாலமாக விரிந்து சிரிக்கும். குண்டும் குழியுமான ரோட்டில் குழந்தை குட்டிகளுடன் இரு சக்கரத்தில் செல்லும் மிடில் கிளாஸ் பொது ஜனம் விழுந்து புலம்பி செல்லும் காட்சிகள் நமது மாநிலத்தில் சகஜம். இதற்கும் ஹை கோர்ட்டில் யாராவது ஒரு புண்ணியவான் நியாயம் கேட்டு கேஸ் போட்டு விமோசனம் தேட வேண்டும். முதல்வர் ஜெ. காவிரி தண்ணி, மின்சார தட்டுபாடு என எட்டா கனிக்கு செய்யும் முயற்சியில் சாதாரண மனிதர்களின் வலிகளை கவனிக்க மறந்து விட்டாரோ என எண்ணத்தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
28-டிச-201218:28:19 IST Report Abuse
g.s,rajan பேப்பர் ரோஸ்ட் சாலைகள் பயனற்றது ,எங்கும் பல்லாங்குழி சாலைகளாக காணப்படும் அவலம் .சாலைகளின் தரமோ தரித்திரம் .வாகன ஓட்டுனர்கள் கட்டும் சாலை வரி எங்கு போகிறது புரியவில்லை .எங்கும் கட்டிங், ,எதிலும் கட்டிங் ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
mangaidaasan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
28-டிச-201218:18:05 IST Report Abuse
mangaidaasan தமிழகத்தில் சாலை பழுதை சரி செய்வதற்கு முன் அரசியல்வாதியின் மூளை மற்றும் மனதை சரி செய்ய வேண்டும். அரசாங்கம் விடும் டெண்டர்களை பெறுவோர் கட்சி சார்பற்றவர்களாகவும், அவர்களின் முன் அனுபவத்தையும் பார்த்து இது போன்ற பணிகளை கொடுத்தால், கொஞ்சமாவது ஊழல் குறையும் வேலையும் நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
deepak - Bangalore,இந்தியா
28-டிச-201218:15:28 IST Report Abuse
deepak சரியாக சொன்னீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
28-டிச-201215:15:19 IST Report Abuse
Chenduraan ரோட்டு வேலை நடந்தால் pwd அதிகாரிகள் அந்த ரோட்டை தரமாக போடப்பட்டுள்ளத என்று ஆய்வு செய்த பின்னரே பணம் கொடுக்க வேண்டும். ரோடு பாட்டால் defects liability period கண்டிப்பாக contractor defects களை சரி செய்த பின்தான் ஒரு பங்கை கொடுக்க வேண்டும். நம்ம ஆரசியல் வாதிகள் தான் contract போடும் முன்பே கமிஷன் வாங்கிவிட்டு முழுத்தொகையும் கொடுத்து விடுகிறார்கள் என்ன செய்வது. MLA , MP களைத்தவிர இப்போது நம்ம கவுன்சிலோர்களும் % பேச ஆரன்ம்பித்து விட்டார்கள். நாடு எங்கே போகும் என்று தெரியவில்லை. எல்லா கோன்றக்ட்களும் PWD செய்தால் மட்டுமே விமோச்சனம் கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
Dhanabal - Thoothukudi,இந்தியா
28-டிச-201212:58:02 IST Report Abuse
Dhanabal ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்காத சாலைகள் ,திறப்பு விழா காணும் முன் விரிசல் காணும் கட்டிடங்கள் இதுதான் தமிழ் நாட்டிலுள்ள சாலைகள் மற்றும் கட்டுமானங்களின் நிலைமை. அரசியல்வாதிகளும் ,அதிகாரிகளும் சாலை மற்றும் கட்டுமான பணிகளுக்கு கட்டிங்,கமிசன் பெறும் கலாச்சாரம் ஒழிக்கப்படாதவரை தரமான சாலைகளோ அல்லது தரமான கட்டுமான பணிகளோ உருவாக வாய்ப்பே இல்லை...
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
28-டிச-201212:39:41 IST Report Abuse
மதுரை விருமாண்டி அடுத்த மாசம் கணக்கு வழக்கில் பாருங்க... எல்லாப் பணமும் செலவாகி விட்டதாக கணக்கு காட்டி விடுவார்கள்.. அரசு அலுவலகத்துக்கு தேவை பேப்பரில் கணக்கு... அவ்வளவு தான்... மற்றபடி பணம்... ஆளும்கட்சியால் லபக்கு தான்...
Rate this:
Share this comment
Cancel
லண்டன் லபக்கு தாஸ் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
28-டிச-201212:04:41 IST Report Abuse
 லண்டன் லபக்கு தாஸ் சில விஷயங்கள எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடராதே இல்லை. அதுல முக்கியமானது காலி பணி வேலைக்கு கான்ட்ராக்டரிம் தர உத்திரவாதம் அதாவது இத்தனை வருடம் உழைக்க வேண்டும் என கண்டிஷன் இருக்க வேண்டும். மற்றொன்று, இந்தியா அதுவும் தமிழ்நாடு தேவைக்கு அதிகமாக சிமெண்ட் உற்பத்தி செய்கிறது. முக்கிய சாலைகளை சிமெண்ட் சாலையாக மாற்றினால் வருட கணக்கில் உழைக்கும். மீண்டும் மீண்டும் போடப்படுவதால் தார் மூலமாக அந்நிய சிலாவனியும் பெருமளவில் மிச்சமாகும். எல்லாத்துக்கும் மேல இந்த சிமெண்ட் கம்பனிங்க சிண்டிகேட் மூலமா செய்யற அட்டூழியங்களும் ஒரு கை பாக்கலாம். இதையெல்லாம் எந்த கட்சியும் செய்ய முன்வராது, ஏனென்றால் முதல் பாதிப்பு அவர்களுக்குதான்...அதாவது, கமிஷன் வருடாவருடம் வராதே???
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
28-டிச-201211:16:22 IST Report Abuse
P. Kannan பெரிய காண்டிராக்டர்கள் உள்கட்டமைப்பு, தாராளமான பணவசதியுடன் இருப்பார், வேலையை யாருக்கும் பிரச்சினை இன்றி குறிப்பிட்ட காலத்தில் முடித்து கொடுப்பார். சிறிய காண்டிராக்டர்கள் டெண்டர் கிடைத்தபின் அதை காட்டி வங்கியில் கடன் வாங்கி வேலையை ஆரம்பிப்பார், எல்லாவற்றிக்கும் பிறரை நம்பியே இருப்பார். அவர் பயனடைய பல்லாயிரக்கணக்கான மக்களின் வசதி வாய்பினை காலம் தாழ்த்தி கிடைக்கும் படி செய்யக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.