திருப்பூர் : திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், விதிமுறையை மீறி, காய்கறிகளை மொத்தமாக விவசாயிகள் விற்பனை செய்வதாக, வியாபாரிகள் புகார்
தெரிவித்தனர்.திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், இரு நாட்களுக்கு முன், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இடையே மோதல் ஏற்பட்டது. உழவர் சந்தை வர்த்தகம் பாதிக்கும் வகையில் வியாபாரிகள் செயல்படுவதாக விவசாயிகளும், விவசாயிகள் விதிமீறல்களில் ஈடுபடுவதாக வியாபாரிகளும் குற்றம் சாட்டினர். இதன் தொடர்ச்சியாக, ரோட்டில் காய்கறிகள் வீசப்பட்டு, சாலை மறியல், அதிகாரி "கெரோ' என போராட்டம் நடந்தது.
அதிகாரிகள் பேச்சு நடத்தி, அவர்களை சமரசப்படுத்தினர்."நேற்றைய தினம், வழக்கம்போல் விவசாயிகள் விதிமீறல்களில் ஈடுபட்டதாகவும், உழவர் சந்தை அலுவலர் கண்டுகொள்ளவில்லை,' என்றும் ஆர்.டி.ஓ.,விடம் வியாபாரிகள் புகார் தெரிவித்தனர். உழவர் சந்தையில் மொத்த வியாபாரிகள், கடை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு மொத்தமாக காய்கறிகள் விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளை வீடியோ மூலம் பதிவு செய்த வியாபாரிகள், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.டி.ஓ.,விடம் புகார் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.