உடுமலை : குடிமங்கலம்
பகுதியில், மானாவாரியாக பயிரிடப்பட்ட கொண்டைக்கடலை செடிகள் கருகி வருவது
குறித்து வேளாண் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மவுனம்
காப்பதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
குடிமங்கலம் மற்றும்
சுற்றுப்பகுதிகளில், வடகிழக்கு பருவ மழையை அடிப்படையாக கொண்டு,
கொண்டைக்கடலை சாகுபடி மானாவாரியாக மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு, 5,000
ஏக்கருக்கும் அதிகமாக கொண்டைக்கடலை, நவ., மாத துவக்கத்தில் பயிரிடப்பட்டது.
விதைப்பு பணிக்கு பின் பருவமழை பெய்யவில்லை. இதனால், பல இடங்களில்,
கொண்டைக்கடலை விதைகள் முளைவிடவில்லை. முளைத்த செடிகள் கருகி வருகின்றன.
தற்போது,
பனிப்பொழிவு காரணமாக, அரைகுறையாக முளைத்த செடிகளில், புழுத்தாக்குதல்
அதிகரித்துள்ளது. போதிய வழிகாட்டுதல் இல்லாததால், விவசாயிகள்
புழுத்தாக்குதலுக்கு எந்த மருந்தை அடிப்பது என தெரியாமல் திணறி
வருகின்றனர். குடிமங்கலம் வட்டாரத்தின் முக்கிய சாகுபடியான கொண்டைக்கடலை
சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள போதிலும், வேளாண் துறையினர் எவ்வித
நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது:
ஆண்டுக்கு
ஒரு முறை பயிரிடப்படும் கொண்டைக்கடலை சாகுபடியே குடிமங்கலம் பகுதி
விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்தாண்டு மழை இல்லாததால், கொண்டைக்
கடலை செடிகள் கருகி வருகின்றன. தற்போதைய நிலையில், ஏக்கருக்கு ஒரு மூட்டை கூட விளைச்சல் கிடைக்காத நிலை உள்ளது.
இந்த
விளைச்சலும், தற்போது அதிகரித்துள்ள புழு தாக்குதலால் கிடைக்குமா என்பது
கேள்விக்குறியாகி உள்ளது. சாகுபடியில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்ட போதும்,
குடிமங்கலம் வட்டார வேளாண் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல்
உள்ளனர்.
தற்போதுள்ள புழுத்தாக்குலை கட்டுப்படுத்த தேவையான ஆலோசனை
கூட்டங்கள் நடத்த வேண்டும். கருகியுள்ள கொண்டைக்கடலை செடிகள் குறித்து
ஆய்வு நடத்தி, தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதனால்,
விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. வேளாண் துறையினர்
தொடர்ந்து மெத்தனப்போக்கை கடைபிடித்தால், விரைவில் போராட்டத்தில்
ஈடுபடுவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.