திருப்பூர் : திருப்பூர்
மாவட்டம், ஊத்துக்குளியில், சாராயம் காய்ச்சிய இருவரை போலீசார் கைது
செய்து, 3 லிட்டர் சாராயம், 30 லிட்டர் ஊறல் பறிமுதல் செய்தனர்.
ஊத்துக்குளி,
பள்ளகவுண்டன்பாளையம் அருகிலுள்ள, குண்டுமல்ல நாயக்கனூர், வீரம்மன் தோட்டம்
பகுதியிலுள்ள முட்காட்டில் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்யப்படுவதாக
தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர்
ஜெயபாலன் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். அப்போது,
சாராயம் காய்ச்சி, விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த
ரங்கசாமி மகன் சின்னசாமி, 36; சென்னிமலை நாயக்கன் மகன் தங்கராஜ், 41
ஆகியோரை பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து, காய்ச்சி வடி கட்டி
விற்பனைக்கு தயாராக இருந்த மூன்று லிட்டர் சாராயம், சாராயம்
காய்ச்சுவதற்காக இரண்டு பானைகளில் ஊறல் போடப்பட்டு, மண்ணில் புதைத்து
வைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் சாராய ஊறல் மற்றும் தயாரிக்க பயன்படும்
மூலப்பொருட்கள்; மூன்று பானைகளை பறிமுதல் செய்தனர். சாராயம் காய்ச்ச,
பயன்படுத்திய அடுப்பை உடைத்து எறிந்தனர்.
சாராயம் காய்ச்சியவர்கள் மீது, ஆபத்தை விளை
விக்கும்
விஷ சாராயம் காய்ச்சியதாக, வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.
ஊத்துக்குளியில் சாராயம் காய்ச்சி விற்ற சம்பவம், போலீசார் மத்தியில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.