அனுப்பர்பாளையம் :பெருமாநல்லூர் ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நூலகத்தின் முன்பக்க வாயிலை, ஊராட்சி நிர்வாகம் பூட்டி வைத்துள்ளது. திறக்க மறுப்பதால், நூலகத்தை வாசகர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லூர் ஊராட்சி அலுவலக வளாகத்தின் பின்பகுதியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 3.75 லட்சம் மதிப்பில் நூலகம் கட்டப்பட்டுள்ளது; ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நூலகராக பணியாற்றுகிறார்.
ஊராட்சி அலுவலகத்துக்குள் சென்று, பின்பக்கமாக நூலகம் செல்ல வேண்டும். இவ்வழி யாருக்கும் தெரிவதில்லை. நூலகத்துக்கு முன்புறம் கேட் உள்ளது. அதை திறந்தால், ஊராட்சி வளாகத்தில் உள்ள பொருட்கள் திருட்டு போக வாய்ப்புள்ளது என கூறி, ஊராட்சி நிர்வாகத்தினர், பூட்டி வைத்துள்ளனர். அதனால், நூலகத்துக்கு வருபவர்கள், கேட் பூட்டப்பட்டு இருக்கிறது என திரும்பிச் சென்று விடுகின்றனர்.
நூலகர் மட்டுமே தினமும் வந்து வருகைப்பதிவு நோட்டில் கையெழுத்திட்டுச் செல்கிறார். அபூர்வமாக மாத்திற்கு ஒருவர் அல்லது இருவர் மட்டுமே வருகின்றனர். நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள், வாசகர்கள் அமர்ந்து படிக்க டேபிள், சேர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் பிடிவாதத்தால் பயனற்று உள்ளது.
வாசகர் ஒருவர் கூறுகையில், "நூலகத்துக்கு வரும் வாசகர்கள், கேட் பூட்டி கிடக்கிறது என திரும்பிச் செல்கின்றனர். இதற்கு, மாவட்ட
நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.