ஆனைமலை : ""மின்வெட்டினால் ஏற்படும்
குடிநீர் பிரச்னை தீர பேரூராட்சிக்கு ஜெனரேட்டர் விரைவில் வாங்க வேண்டும்,'' என பேரூராட்சி
கூட்டத்தில் கவுன்சிலர்கள்
வலியுறுத்தினர்.
ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியில்
தலைவர் மகேஷ்வரி தலைமையில் கவுன்சில் கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் அருள்பிரசாத், செயல் அலுவலர் நாகமுத்து
முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
துரைசாமி
(மா.கம்யூ.,): பேரூராட்சிகளில் நடைபெறும் பணிகள் பற்றி, பணி நடைபெறும்
பகுதியில் எந்த நிதி, எந்த திட்டம், தொகை எவ்வளவு என்பது பற்றிய தகவல்
பலகைகள் வைக்கவேண்டும். அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவமனை கட்டும்
பணியில் முறைகேடு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
செயல் அலுவலர்: பணிகள் பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நமது பேரூராட்சியில் சுகாதாரப்பணியில் தன்னிறைவு அடைந்துள்ளோம்.
சாந்தகுமார் (சுயே.,): பேரூராட்சி பகுதிகளில் உள்ள விளக்கு பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும்.
காளியம்மாள் (அ.தி.மு.க.,): மின்வெட்டினால் ஏற்படும் குடிநீர் பிரச்னை தீர ஜெனரேட்டர் விரைவில் வாங்க வேண்டும்.
செல்வானந்தம் (சுயே.,): தேவிபட்டினம் பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும்.
தண்டபாணி (அ.தி.மு.க.,): காளியாபுரம் பகுதியில் ஒன்றரை ஆண்டுகளாக கழிப்பிடம் சரிசெய்யப்படாமல் உள்ளது.
துணைத்தலைவர்: சரளப்பதி ரோட்டில் உள்ள வேட்டைக்காரன்
புதூர் தலகண்டம்மன் கோவிலுக்கு குடிநீர் இணைப்பு வழங்க
வேண்டும்.
செயல் அலுவலர்: கழிப்பிடம், ஜெனரேட்டர் பிரச்னைகள் சரி
செய்யப்படும்.
கூட்டத்தில் வரிவசூல், சேத்துமடை பகுதியில் உயர்நிலைப்
பள்ளிக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.