கோவை : கோவை வக்கீல்கள் சங்கத் தேர்தலில், இவ்வாண்டு கடும் போட்டியை ஏற்படுத்த வக்கீல்கள் திட்டமிட்டுள்ளனர். கோவை வக்கீல்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படுகின்றனர். போட்டி இருக்கும் பட்சத்தில் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.தற்போதைய
தலைவர் நந்தகுமார் தொடர்ந்து வெற்றி பெற்று, நான்காவது முறையாக தலைவர்
பதவியில் இருக்கிறார். இந்த ஆண்டு நடக்கும் தேர்தலில்
போட்டியிடப்போவதாகவும் முடிவு செய்துள்ளார். இதேபோல், செயலாளர் ரிச்சர்ட்,
பொருளாளர் விஜயராகவன் ஆகியோர் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.
இச்சூழலில்,""பொறுப்பில்
இருப்பவர்களே பதவியை தக்க வைத்துக் கொள்ளக் கூடாது; மற்றவர்களுக்கும்
வழிவிட வேண்டும்"" என்ற பேச்சு வக்கீல்களிடையே எழுந்துள்ளது.
இதனால், வரும் ஜனவரி கடைசி வாரத்தில் நடக்க உள்ள தேர்தலில் கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
நடக்கவுள்ள
தேர்தலில், அதிக அதிகாரம் உள்ள தலைவர் பதவிக்கு பெரும்பாலும் போட்டி
இருக்காது என்று கூறும் வக்கீல்கள் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு
பலத்த போட்டி இருக்கும் என்றே கூறுகின்றனர்.
தற்போது கோவை வக்கீல்கள் சங்கத்தில் 3,500க்கும் மேற்பட்ட வக்கீல்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில்,
ஒரு சில வக்கீல்கள் தங்களுக்கென ஒரு குழுவை ஏற்படுத்தி கொண்டுள்ளனர்.
தேர்தலில் யார் போட்டியிட்டாலும், இக்குழுவை காட்டி, தங்கள் செல்வாக்கை
வெளிப்படுத்துகின்றனர்.
தனிப்பட்ட முறையில் வக்கீல்கள் தங்களின் சொந்த பலத்தை காட்டி, சுலபமாக வெற்றி பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.
ஆனாலும்,
வக்கீல்களிடம் பழகும் முறை, வக்கீல் தொழிலை கற்றுத்தரும் போக்கு இவற்றைக்
கொண்டு சிலரும் பணம், சாதி, நட்பு முறை, சீனியர் -ஜூனியர் உறவுமுறை, மோதல்
போக்கு, செயல்பாடு மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவு இவற்றினாலும் வெற்றி
பெறலாம் என சிலரும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
நடக்கவுள்ள தேர்தலில், போட்டியிட இப்போதே வக்கீல்கள் சிலர் ஆயுத்தமாகி, ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தேர்தல்
தேதி அறிவிக்காத நிலையில், சக வக்கீல்களை எதிரே சந்திக்கும்போது வணக்கம்
கூறுவது, நலம் விசாரிப்பது, வழக்குகளில் சந்தேகம் கேட்பது என, பல
நடைமுறைகளை ஒரு சிலர் அறிமுகப்படுத்தி, தேர்தலுக்கு முன்னோட்டம் காட்டி
வருகின்றனர்.
ஓட்டுக்காகவே இந்த "திடீர்' நலம் விசாரிப்பு என்பது சீனியர்களுக்கு தெரிந்தாலும், கண்டு கொள்ளாமல் தங்கள் பணியை தொடர்கின்றனர்.
முடிவாக,
எதிர்வரும் தேர்தலில் தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் மீண்டும்
தேர்ந்தெடுக்கப்படுவார்களா அல்லது புதியவர்களும் சில பழைய முகங்களும்
கலந்து வெற்றி பெறுவார்களா அல்லது முற்றிலும் புதியவர்கள் பதவிகளை
பிடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு, தேர்தல் நடைமுறைகள் வருவதற்கு முன்பாகவே
வக்கீல்களிடையே ஏற்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.