புத்தாண்டு கொண்டாடத்திற்கு இன்னும் 3 தினங்கள் : சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிப்பு.
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கன்னியாகுமரி : புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு 3 தினங்களே உள்ள நிலையில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரி, சுற்றுலா பயணிகளால் திணறி வருகிறது. தங்குவதற்கு கூட சரியான இடம் கிடைக்காமல் பயணிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. லாட்ஜ்களில் அறைகட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருக்குறளை இயற்றிய ஐயன் திருவள்ளுவர் சிலை, மகாத்மா காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், பகவதியம்மன் கோயில், புனித அலங்கார உபகார அன்னை ஆலயம், சூரியஉதயம் மற்றும் அஸ்தமனம் என பல்வேறு பிரசித்திபெற்ற அம்சங்களை கொண்ட கன்னியாகுமரி சுற்றுலாதலத்திற்கு பயணிகளின் வருகை ஆண்டுக்காண்டு அதிகரித்து கொண்டே வருகிறது.
சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு ஆண்டின் அனைத்து நாட்களும் சுற்றுலா பயணிகளின் வருகை இருந்தபோதிலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் ஏப்ரல், மே ஆகிய 5 மாதங்களும் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. ஆண்டுதோறும் 25லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாபயணிகள் கன்னியாகுமரிக்கு வந்து செல்கின்றனர்.
வழக்கமாக டிசம்பர் மாதத்தை பொறுத்தவரை அரையாண்டு பரீட்சை விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, என இந்த மாதத்தில் விடுமுறை தினங்கள் தொடர்ச்சியாக வருவதால் டிசம்பர் மாதத்தில் 24ம்தேதியிலிருந்து ஜன1ம்தேதி வரை சுற்றுலா பயணிகளின் வருகை மிக அதிகளவில் இருக்கும். தற்போது 25ம் தேதியில் இருந்து கன்னியாகுமரியில் கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது. சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் வாகன நெருக்கடி இருந்து வருகிறது.
சுற்றுலா பயணிகள் வருகையால் சுவாமி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல சுற்றுலாபயணிகள் படகுதுறையில் இருந்து ரதவீதிவரை நீண்டவரிசையில் பலமணிநேரம் காத்திருக்கின்றனர். இதனால் தினசரி 10 ஆயிரம் சுற்றுலாபயணிகள் படகு மூலம் சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வருகின்றனர். அதேபோல் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருப்பதால் பகவதியம்மன் கோயிலில் சுவாமிதரிசனம் செய்யவும் பலமணிநேரம் காத்திருக்கின்றனர்.
ரூம்கள் இல்லை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட லாட்ஜ்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக ரூம்கள் ஏற்கனவே புக் செய்யப்பட்டு விட்டதால் அறைகள், கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் திணறி வருகின்றனர். மேலும் கன்னியாகுமரியில் 3 நாட்கள் அகில இந்திய டாக்டர்கள் மாநாடு நடந்து வருவதால் அதற்காக 500க்கும் மேற்பட்ட அறைகள் 3 மாதத்திற்கும் முன்பே புக் செய்யப்பட்டு விட்டதும் தற்போது அறைகிடைக்காததற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
அதேபோல் அறைகளின் வாடகையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. சாதாரணமாக ஆயிரம் ரூபாய் வாடகை கொண்ட ஒரு அறை தற்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர குடும்பங்கள் சுற்றுலா வந்தாலும் அறை எடுக்கமுடியாத நிலை உள்ளது. இந்த வாடகை அதிகரிப்பு இன்னும் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் மகரஜோதி தரிசனம், பொங்கல் பண்டிகை என வரிசையாக விழாக்கள் வருவதால் அடுத்தாண்டு(2013) ஜனவரி 20ம்தேதி வரை சுற்றுலாபயணிகள் கூட்டம் இருக்கும் என சுற்றுலாதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-டிச-201211:52:14 IST Report Abuse
கார்த்தி, புத்தாண்டிற்க்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்