தோகா:ஆசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியின் பரபரப்பான பைனலில் பாகிஸ்தான் இந்தியாவை 5-4 என்ற கோல் கணக்கில் வீழத்தி பாகிஸ்தான் சாம்பியன்ஸ் பட்டம் பெற்றது. கத்தார் தலைநகர் தோகாவில் ஆசியன் சாம்பியன்ஸ் ஹாக்கிப்போட்டிகள் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஓமன், சீனா, ஜப்பான், மலேஷியா உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்றன. இன்று நடந்த பைனலில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின.
இதில் இதில் தற்போதைய சாம்பியன் இந்தியாவை ,பாகிஸ்தான் 5-4 என்ற கோல் கணக்கில் வீழத்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாவது பாதியின் 42-வது நிமிடத்தில் பாக்.ஒரு கோல்அடித்து 2-2 என சமன் செய்தது. இதையடுத்து உற்சாகமடைந்த பாக். அடுத்த 6-வது நிமிடத்தில் ஒரு கோல்அடித்து 3-2 என முன்னேறியது.
இதற்கு இந்தியாவும் பதிலடியாக 55-வது நிமிடத்தில் ஒரு கோல்அடித்து 3-3 என சமன் செய்தது. பின்னர் 58-வது நிமிடத்தில் பாக்.பதிலடிகொடுக்க 4-4 என்ற நிலை இருந்தது. கடைசியாக பாகிஸ்தானின் முகமது இம்ரான், 64-வது நிமிடத்தில் அடித்த கோலால் பாகிஸ்தான் 5-4 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.