தூத்துக்குடி
: தூத்துக்குடியில் நேற்று 100க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள்
நடத்திய அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பாலித்தீன்
கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளாஸ்டிக்
பைகள், மற்றும் பாலீத்தின் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்த தடை
விதிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பு
விழிப்புணர்வு பேரணிகள், பிரசாரங்கள் நடத்தப்பட்டது.
இதையடுத்து
மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மற்றும் மாநகராட்சி சுகாதார துறை
ஆய்வாளர்கள் கடைகளில் அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து தடைசெய்யப்பட்ட
பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தால் பறிமுதல் செய்தும் அபராதமும் விதித்து
வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் உத்தரவின்
பேரில் மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் கோகுல்தாஸ் மற்றும்
மாநகராட்சி சுகாதார துறை ஆய்வாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள்
தூத்துக்குடியில் டபிள்யூசி ரோடு, வஉசி மார்க்கெட், வடக்குரதவீதி, தெற்குரத
வீதி, விஇ ரோடு உள்பட பல இடங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளில்
திடீர் சோதனை செய்தனர். அப்போது 25 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்
பைகள், பிளாஸ்டிக் கப்புகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மொத்தம் 15
கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அனுமதிக்கப்பட்ட
அளவைவிட பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்தற்காக ரூ.500 அபராதமும்
விதிக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.