புதுடில்லி:காவிரி நதி பாயும் மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமல் , காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில், வெளியிடக்கூடாது என மத்திய அரசுக்கு,கர்நாடகா முதல்வர் ஷெட்டர் வலியுறுத்தினார்.
காவிரி நதிநீர் பிரச்னை பல ஆண்டுகளாக கர்நாடகா-தமிழகம் இடையே நிலவி வருகிறது. இது தொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் நடந்துவருகிறது. இந்நிலையில் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் டில்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று நடந்தது.இதில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கலந்து கொண்டு பேசியதாவது:
வெளியிடக்கூடாது:காவிரி நடுவர்மன்ற தீர்ப்பினையடுத்து,தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு காவிரி நதிநீர் பங்கீடு குறித்து கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே காவிரி நடுவர்மன்ற தீர்ப்பினை மத்திய அரசு அரசிதழில் இம்மாதம் இறுதிக்குள் வெளியிட முடிவு செய்துள்ளது சரியல்ல. அவ்வாறு அரசிதழில் வெளியிடும் முன்னர் மற்ற மாநிலங்களை கலந்தாலோசனை செய்து ஒருமித்த கருத்து எட்டியப்பின்னரே பரிசீலிக்க வேண்டும். காவிரி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் தாவா சட்டம் பிரிவு 5(1)-ன் கீழ் நாங்கள் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பாயத்திடம் அப்பீல் செய்துள்ளோம். அதுவரை அரசிதழில்,மத்திய அரசு வெளியிடக்கூடாது. இது தொடர்பாக நான் பிரதமருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளேன் என்றார்.
இதற்கிடையே, காவிரி நடுமன்ற தீர்ப்பினை மத்திய அரசு ,அரசிதழில் வெளியிட வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். ஆனால் நேரம் ஒதுக்க பிரதமர் மறுதது வருகிறார் என தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். எனினும் தனக்கு பேச நேரம் குறைவாக இருந்ததால் கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்ததாக தெரிவித்திருந்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.