chief ministerf insult: dmk leader statement | முதல்வரை அவமானப்படுத்தியிருந்தால் கண்டிக்கிறேன் கருணாநிதி பேட்டி| Dinamalar

முதல்வரை அவமானப்படுத்தியிருந்தால் கண்டிக்கிறேன் கருணாநிதி பேட்டி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
முதல்வரை அவமானப்படுத்தியிருந்தால் கண்டிக்கிறேன்  கருணாநிதி பேட்டி

சென்னை:""தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்ற, முதல்வர் ஜெயலலிதாவை, அவமானப்படுத்தியிருந்தால், அதை நான் கண்டிக்கிறேன்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.சென்னை அறிவாலயத்தில், கருணாநிதி அளித்த பேட்டி:டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில், கலந்து கொள்ள சென்ற முதல்வர் ஜெயலலிதா, அங்கே பேசுவதற்கு போது மான நேரம் தரப்படவில்லை என்றும், தமிழக அரசை அவமானப்படுத்தி விட்டதாகவும், குறை கூறி வெளிநடப்பு செய்திருக்கிறார்.

அவரை அவமானப்படுத்தியிருந்தால், அதை நான் கண்டிக்கிறேன். நான் பல முதல்வர்கள் மாநாடுகளுக்கும், தேசிய வளர்ச்சிக் குழு கூட்டங்களுக்கும் சென்றிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில், முதல்வர்கள் தங்களுடைய பேச்சுக்களை, விரிவாக அச்சடித்து, புத்தகமாக மேஜைகளில் வைத்து விடுவர்.

அவர்களுக்கென்று, ஒதுக்கப்பட்ட நேரம் வரையில், படிப்பர். மீதமுள்ள பகுதிகளை, பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வர். அப்படித் தான், முதல்வர்கள் மாநாட்டில் பழக்கம். நானும் ஐந்து முறை முதல்வராக இருந்த போது, அந்தப் பழக்கத்தை டில்லியில் பார்த்திருக்கிறேன். ஆனால், ஜெயலலிதா வித்தியாசமாக நடந்து கொண்டிருக்கிறார்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethu - Chennai,இந்தியா
29-டிச-201200:04:14 IST Report Abuse
sethu பேசி தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் அதிகம் ஆன்னால் முடிவில் மாற்றம் இல்லை அதனால் இது சடங்குதான் என்பதை மக்களிக்கு உணர்த்திய ஜயாவை நான் மக்களை சார்பாக பாராட்டுகிறேன் இனி எவனும் பிரதமரை ஜெயா பார்க்கவில்லை என குறை சொல்லமுடியாது.,எல்லோரும் பதவியே நல்லதுக்கும்,மக்களின் வளர்ச்சிக்கும் பயன்படுத்துவர்,ஏன் இன்று பாதைக்கு வந்த மம்தா பேனர்ஜி கூட வெஸ்ட் பெங்கால் மக்களின் நன்மைக்குத்தான் தனது மத்திய அரசின் உறவை வேண்டாம் என வெளியே வந்துள்ளார் ,ஆனால் சிலர் நான் 54 ஆண்டுகள் பொதுவால்க்கைல் கடமை ஆற்றியுள்ளேன் என கூறிக்கொண்டு ,திரிவது,கழுதைக்கும் சும்மா இருந்தால் வயதாகாமல் இருக்குமா,
Rate this:
Share this comment
Cancel
M.Balakrishnan - Chennai,இந்தியா
28-டிச-201215:27:41 IST Report Abuse
M.Balakrishnan அங்கு பங்குகொள்ளுகின்ற எல்லோருக்குமே நம்முடைய தேவைகளும், பிரச்சனைகளும், வேண்டுகோளும் தெரிய வேண்டும். எந்தவித ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது. எனவே எல்லோருக்கும் அவர்களிடம் கேட்டு, அவரவர்களுக்குப் போதுமான நேரம் ஒதுக்கவேண்டும். எல்லோருமே மக்களின் முக்கியப் பிரதிநிதிகள். சம அந்தஸ்து உடையவர்கள். எனவே புத்தகமாக அச்சிட்டு வைத்தால் மற்றவர்களுக்கு நமது உட்கருத்து தெரியாமல் போகலாம். அல்லது திரித்துக் கூறப்படலாம். புத்தமாகக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பேச தேவையான அளவு நேரம் வழங்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Bellie Nanja Gowder - Coimbatore,இந்தியா
28-டிச-201211:15:54 IST Report Abuse
Bellie Nanja Gowder நல்ல முன்னேற்றம். இந்த நாகரிக அரசால் தொடரட்டும்.
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
28-டிச-201210:16:23 IST Report Abuse
சகுனி "இவன் ரொம்ப நல்லவன்னு" சொல்லுங்க எல்லாரும் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.