டெஹரான்: மருந்து பொருட்கள் மீது விலை உயர்வு அறிவித்த ஈரான் பெண் அமைச்சரை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். ஈரான் அதிபராக முகமது அகமது நிஜாத் (55) உள்ளார். இவரது அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சராக மெரீஷா வாஹில் தஸ்தர்டி உள்ளார். சுகாதாரத்துறை அமைச்சரான இவர். நாட்டில் மருந்து பொருட்கள் மீது விலை உயர்வை அறிவித்தும், 2.4 மில்லியன் டாலர் அளவுக்கு மேற்கத்திய மருந்து பொருட்கள் இறக்குமதி செய்தும் உத்தரவிட்டார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அணுசோதனை செய்வதை அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பதால் அமெரிக்க மருந்து பொருட்கள் இறக்குமதிக்கும் அனுமதியளித்ததால் ஆத்திரமடைந்த அதிபர், இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.