மதுரை: மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தின் மாவட்ட வருவாய் அலுவலகத்தின் இரண்டாவது மாடி கட்டடத்தில் ‘ஆ’ பிரிவு அலுவலகம் உள்ளது. இங்கு இன்று அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் தொழிலாளர் வருகைப்பதிவேடு தொடர்பான ஆவணங்கள், 6 கம்ப்யூட்டர்கள் மற்றும் மரச்சாமன்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாயின. சம்பவம் அறிந்த தீயணைப்பு படையினர் 4 வாகனங்களில் விரைந்துவந்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். எனினும் விசாரணைக்கு பின்னரே தீ விபத்திற்கான காரணம் தெரியவரும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.